கோவை, ஊழல், அநீதி, அடக்குமுறையிலிருந்தும் விடுதலை பெறுவதே உண்மையான சுதந்திரம் என கனிமொழி சந்தோஷ் எம்.எல்.ஏ கூறியுள்ளார். நாட்டின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: நாட்டின் விடுதலைக்காக தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த சுதந்திரப் போராட்ட வீரர்களை இந்நாளில் நன்றியுடன் நினைவுகூர்வோம். வெள்ளையர்களிடமிருந்து விடுதலை பெற்றது மட்டுமல்ல; ஊழல், அநீதி, அடக்குமுறை இல்லாத சமூகத்தை உருவாக்குவதும் உண்மையான சுதந்திரமே. ஒவ்வொரு குடிமகனுக்கும் சம உரிமை, சமூகநீதி, பாதுகாப்பு மற்றும் கண்ணியமான வாழ்க்கை கிடைப்பதை உறுதி செய்வதே சுதந்திரத்தின் உண்மையான நோக்கமாகும். மக்களின் உரிமைகளைப் பாதுகாத்து, வெளிப்படையான நிர்வாகத்தை முன்னெடுத்து, ஊழலில் இருந்து விடுதலை பெற்ற, சமூகநீதி நிறைந்த, வளமான தமிழகத்தை உருவாக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம். சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகளை நனவாக்கும் வகையில், ஜனநாயகத்தையும் அரசியலமைப்பின் மாண்புகளையும் காப்போம். சுதந்திரம் போற்றுவோம்!ஊழலில் இருந்து விடுதலை பெறுவோம்!மக்கள் நலனுடன் புதிய தமிழகத்தை உருவாக்குவோம் என்று அவர் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/true-freedom-is-freedom-from-corruption-injustice-and-oppression-kanimozhi-santosh-mla




