கோவை கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் பின்புறம் உள்ள வனப்பகுதியில், பல்கலைக்கழக ஊழியர் ஒருவர் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். வனப்பகுதியில் சடலம் கோயம்புத்தூர் மாவட்டம் ஆனைக்கட்டி பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார் (வயது 33). இவர் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று (வியாழக்கிழமை) அன்று இவர் பல்கலைக்கழக வளாகத்தின் பின்புறம் உள்ள ஒதுக்குப்புறமான வனப்பகுதியில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். போலீசார் விசாரணை அந்த வழியாக தேன் எடுக்கச் சென்றவர்கள் இதைப் பார்த்து உடனடியாக போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வடவள்ளி காவல் நிலைய போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் விரைந்து வந்தனர். பின்னர் சசிகுமாரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திலுள்ள ஆதாரங்களை திரட்டினர். மேலும் இந்த கொலைக்கான காரணம் முன்விரோதமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என சசிகுமாரின் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் இவரின் உடலில் காயங்கள் இருந்ததால் இது கொலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் வடவள்ளி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-employee-found-dead-in-bharathiar-university-forest-area




