கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றபோது படகு விபத்தில் சிக்கிய 11 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை இன்று பத்திரமாக மீட்டது.இலங்கையின் வடக்கு கடற்கரை பகுதியில், பாக் ஜலசந்தியில் அமைந்துள்ள நெடுந்தீவு அருகே கடலுக்கடியில் உள்ள பாறையில் மீன்பிடி படகு மோதி இந்த விபத்து ஏற்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. இலங்கை கடற்படை இந்த தகவல் கிடைத்ததும் இலங்கை கடற்படை விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டு, படகில் இருந்த 11 மீனவர்களையும் பாதுகாப்பாக கரைக்கு அழைத்து வந்தது. அவர்கள் அனைவரும் நெடுந்தீவுக்கு கொண்டு செல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வ தெரிவிக்கப்பட்டுள்ளது.மீட்கப்பட்ட மீனவர்கள் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் இலங்கை மீன்வள மற்றும் நீர்வாழ் வளத் துறை அதிகாரிகளுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.பாறையில் மோதியதால் மீன்பிடி படகு சேதம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. பாக் ஜலசந்தி இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி இலங்கைக்கு நேற்று பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தின்போது, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை விரைவில் விடுவிக்க ஒத்துழைப்பு வழங்குமாறு இலங்கை அரசிடம் வலியுறுத்தியிருந்தார். இந்த கோரிக்கை வைத்து இருந்த மறுநாளே படகு விபத்தில் சிக்கிய மீனவர்களை இலங்கை கடற்படை மீட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பாக் ஜலசந்தி பகுதியில் இந்திய மற்றும் இலங்கை மீனவர்கள் கடல் எல்லையை தவறுதலாகக் கடந்து செல்வது தொடர்பான பிரச்சினை இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகாலமாக நீடித்து வரும் முக்கிய பிரச்சினையாக உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/11-indian-fishermen-rescued-safely-after-boat-accident-in-sri-lankan-waters




