சென்னை, சென்னையில் ஒரு பெண்ணின் மகனுக்கு மருத்துவ கல்லூரியில் சீட் வாங்கி தருவதாக கூறி ரூ.5.8 லட்சம் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். மருத்துவ கல்லூரி சீட்டுக்கு ரூ.5.8 லட்சம் சென்னை பெரவள்ளூர் பேப்பர் மில்ஸ் சாலையைச் சேர்ந்தவர் சுகன்யா லட்சுமி (வயது 37). இவர், நண்பர் மூலம் அறிமுகமான சென்னையை அடுத்த கரையான்சாவடியைச் சேர்ந்த சக்தி(27) என்பவரிடம், தனது மகனுக்கு தனியார் கல்லூரியில் மருத்துவ படிப்புக்கான 'சீட்' வாங்கித் தருவதற்காக ரூ.5 லட்சத்து 80 ஆயிரம் கொடுத்துள்ளார். ஆனால், பணத்தை வாங்கிய சக்தி, சொன்னபடி மருத்துவ கல்லூரியில் 'சீட்' வாங்கி தரவில்லை. மேலும் சுகன்யா லட்சுமியிடம் வாங்கிய பணத்தையும் திருப்பி தராமல் ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது. பண மோசடி, வாலிபர் கைது இந்த பண மோசடி குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி சுகன்யா லட்சுமி, திரு.வி.க. நகர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மருத்துவ கல்லூரியில் 'சீட்' வாங்கி தருவதாக சக்தி மோசடி செய்தது உறுதியானது. இதையடுத்து சக்தியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-arrested-for-cheating-rs-58-lakhs-by-promising-to-buy-a-seat-in-a-medical-college



