கொல்கத்தா, மேற்கு வங்காளத்தில் சட்டசபைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டது. மொத்தம் உள்ள 80 எம்.எல்.ஏ.க்களில் 58 பேர் மம்தா பானர்ஜிக்கு எதிராக போர்க்கொடி தூக்கி தனி அணியாக செயல்பட்டு வருகிறார்கள்.இதேபோல் அந்த கட்சியின் நாடாளுமன்ற மக்களவை எம்.பி.க்கள் 20 பேர் பா.ஜ.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியிருந்தனர். கட்சியில் பெரும் உட்கட்சிப்பூசல் வெடித்துள்ள நிலையில், திரிணாமுல் காங்கிரசின் நிதியை கையாளுவதில் போட்டி ஏற்பட்டு உள்ளது. அதோடு கட்சி நிர்வாகிகள் பலரும் திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகி வருகிறார்கள். இதனால் திரிணாமுல் காங்கிரஸ் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளது. இந்த நிலையில், கடந்த மாதம் 5-ந் தேதி, கட்சியின் மேற்கு வங்காள மாநில தலைவராக நியமிக்கப்பட்ட சந்தி ரிமா பட்டாச்சார்யா, நேற்று அப்பதவியை ராஜினாமா செய்தார். கட்சியின் இதர பதவிகளில் இருந்தும் விலகுவதாக மம்தா பானர்ஜிக்கு அவர் கடிதம் எழுதி உள்ளார். இவர் 3 தடவை எம்.எல்.ஏ.வாகவும், மம்தா அரசில் மந்திரியாகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/west-bengal-trinamool-congress-leader-resigns




