சென்னை, அரசு செய்திகளில் சைகை மொழிபெயர்ப்புத் திரையை 50 சதவீதம் வரை பெரிதாக்க வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் கோரிக்கை விடுத்துள்ளது. அமைச்சர் ஜெகதீஸ்வரியிடம் மனு அரசு செய்தி வெளியீடுகள் மற்றும் நேரடி ஒளிபரப்புகளின் போது காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்படும் சைகை மொழிபெயர்ப்பாளரின் வீடியோ திரையின் அளவை பெரிதாக்க வேண்டும் என்று சமூக நலன் மற்றும் மகளிர் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் ஜெகதீஸ்வரியிடம், தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல வாரிய உறுப்பினர் மெய்கண்டன் கோரிக்கை மனு அளித்துள்ளார். சைகை மொழி பெயர்ப்பாளர்கள் அவர் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு: தமிழ்நாடு அரசு மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறை (DIPR) சார்பில் முக்கிய அரசு செய்திகள், அறிவிப்புகள் மற்றும் செய்தியாளர் சந்திப்புகளின் போது சைகை மொழிபெயர்ப்பாளர்களைப் பயன்படுத்துவதற்கு முதற்கண் நெஞ்சார்ந்த நன்றிகள் தெரிவித்துக் கொள்கிறோம். தற்போதைய நேரடி ஒளிபரப்பு மற்றும் செய்தி வீடியோக்களில் சைகை மொழிபெயர்ப்பாளர் தோன்றும் திரையின் அளவு மிகச் சிறியதாக இருப்பதால், தூரத்தில் இருந்து பார்க்கும் போது அவர்களின் கை மற்றும் முக பாவனைகளை தெளிவாக புரிந்து கொள்ள முடிவதில்லை. திரையின் அளவை அதிகரிக்க வேண்டும் காது கேளாத மக்களின் தகவல் அறியும் உரிமையை உறுதி செய்யும் வகையில், இனிவரும் காலங்களில் அரசு செய்தி வெளியீடுகளின் போது சைகை மொழிபெயர்ப்பாளரின் வீடியோ அளவைக் குறைந்தது திரையின் அளவை 30 முதல் 50 சதவீதம் வரை கணிசமாக பெரியதாக அமைத்து ஒளிபரப்ப உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த கோரிக்கை மனு சமூக நலன் மற்றும் மகளிர் அதிகாரமளித்தல் துறை அமைச்சர், செய்தி மக்கள் தொடர்புத்துறை (DIPR) இயக்குநர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மாநில ஆணையாளர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/sign-language-translation-screen-should-be-enlarged-in-government-news-disability-welfare-board-insists




