புதுடெல்லி, வாக்காளர் பட்டியலை சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்.) செய்வது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக வெளியான தகவல்களை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. தேர்தல் ஆணையர்களுக்கு தனிப்பட்ட முறையில் வெவ்வேறு கருத்துகள் இருக்கலாம் என்றாலும், தேர்தல் ஆணையத்தின் முடிவுகள் அனைத்தும் மூன்று தேர்தல் ஆணையர்களின் ஒப்புதலுடனும் ஒருமனதாகவுமே எடுக்கப்பட்டதாக ஆணைய வட்டாரங்கள் கூறுகின்றன. வாக்காளர் தரவுத்தளம் நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் எஸ்.ஐ.ஆர். பணிகள் தொடர்பாக தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் கடந்த 10 மாதங்களில் குறைந்தது 14 முறை சில முடிவுகள் மற்றும் உத்தரவுகளுக்கு ஆட்சேபனை தெரிவித்ததாக தனியார் நாளிதழ் ஒன்றில் செய்திகள் வெளியாகியிருந்தன. வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை நீக்குவது, வாக்காளர் தரவுத்தளத்தை கையாள்வது உள்ளிட்ட விவகாரங்களில் அவர்கள் கேள்வி எழுப்பியதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்திலும் புயலை கிளப்பியது. பெரும்பான்மை ஆதரவு இல்லை தேர்தல் ஆணைய உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு பெறாத தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை நீக்க வேண்டும் என்று கபில் சிபல் மற்றும் எதிர்க்கட்சியினர் வலியுறுத்தினர். இது குறித்து கபில் சிபல் கூறும் போது,: “தேர்தல் ஆணையத்தில் அரங்கேறும் முறைகேடுகளை பார்த்த சிலருக்கு மனசாட்சி உள்ளது என்பது தெரியவந்துள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு பெரும்பான்மை ஆதரவு இல்லை என்பது தெரியவந்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் பல்வேறு நடவடிக்கைகளில் அவருக்கு, மற்ற இரண்டு ஆணையர்களான சுக்பிர் சிங் சாந்து, விவேக் ஜோஷி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. தேர்தல் ஆணையம் மறுப்பு அதுவும் கடந்த 10 மாதங்களில் 14 முடிவுகளுக்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எனவே, ஞானேஷ் குமாரை பணி இடைநீக்கம் செய்து, எஸ்ஐஆர் நடைமுறையை நிறுத்த வேண்டும். பிஹார் மற்றும் பல இடங்களில் நடைபெற்ற தேர்தலை ரத்து செய்ய வேண்டும்” என்று கூறியிருந்தார். எனினும், நாளிதழில் வெளியான செய்திக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் தரப்பில் கூறியதாவது: தனிப்பட்ட கருத்துகள் அல்லது அதிகாரிகளால் எழுப்பப்படும் கேள்விகள், தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ முடிவுகளுக்கு எதிரான கருத்து வேறுபாடாக கருதப்படாது. எஸ்ஐஆர் உள்ளிட்ட தேர்தல் ஆணையத்தின் அனைத்து நடவடிக்கைகளும் ஒருமனதாக தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் இரு தேர்தல் ஆணையர்களின் ஒப்புதலை பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/all-decisions-were-taken-unanimously-election-commission-responds-to-opposition-allegations




