சென்னை, திருவண்ணாமலை மலப்பம்பாடி ஏரியில் ரூ.8 கோடி மதிப்புள்ள மண் திருடப்பட்டதாக அறப்போர் இயக்கம் அளித்த புகாரின் அடிப்படையில் திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திமுக வடமண்டல இளைஞரணி மாநாட்டை ஒருங்கிணைத்த முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, மாநாட்டு அரங்கத்தை சமன்படுத்துவதற்காக அருகில் உள்ள மலப்பம்பாடி ஏரியில் இருந்து சட்டவிரோதமாக மண் திருடியதாக கடந்த ஆகஸ்ட் 13-ம் தேதி அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளித்தது. மலப்பம்பாடி ஏரியில், 12 ஏக்கர் பரப்பளவில், 10 முதல் 23 அடி (3 முதல் 7 மீட்டர்) ஆழத்திற்கு மண் சட்ட விரோதமாக எடுக்கப்பட்டு உள்ளது. இது சட்டப்படி அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக அள்ளப்பட்டு உள்ளது. ஏரியில் இருந்து 45,72,058 கன அடி மண்அள்ளப்பட்டு, அது எ.வ.குமரனுக்குச் சொந்தமான அருணை ப்ராடக்ட்ஸ் அண்ட் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிலத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. எ.வ.வேலுவின் மகன் எ.வ.குமரன், வருவாய்த் துறை, மாநகராட்சி அல்லது புவியியல் மற்றும் சுரங்கத் துறையிடம் எந்தவொரு அனுமதியையும் பெறவில்லை. இதனால் வழக்குப்பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறப்போர் இயக்கம் புகார் மனுவில் குறிப்பிட்டு இருந்தது. தற்போது முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, அவரது மகன் எ.வ.குமரன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நெடுஞ்சாலை துறை டெண்டரில் முறைகேடு செய்துள்ளதாக எழுந்துள்ள புகாரில் எ.வ.வேலு மீது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/case-registered-against-former-minister-ev-velu




