தமிழ்நாட்டில் தொழில்நுட்ப நகரங்கள், பரபரப்பான சுற்றுலா தலங்கள் எத்தனை இருந்தாலும், இன்னும் இயற்கையின் மடியில் மறைந்து கிடக்கும் சில வினோதமான இடங்களும் இருக்கின்றன. வனத்துறை கடும் கட்டுப்பாடு அப்படிப்பட்ட தனித்துவமான கிராமங்களில் ஒன்றுதான், நீலகிரி மலைத்தொடரின் விளிம்பில் அமைந்துள்ள 'தெங்குமரஹாடா'. நீலகிரி மாவட்டத்தின் கோத்தகிரி பகுதியில் இருக்கும் இந்த கிராமத்தை, நேரடியாக மலைப் பாதை வழியாக எளிதில் அடைய முடியாது. பெரும்பாலும் ஈரோடு மாவட்டம் வழியாகச் சாலை மார்க்கமாகவே செல்ல வேண்டும். அதுவும் வனத்துறையின் கடுமையான அனுமதி கட்டுப்பாடுகளுடன்தான். காரணம். இந்த கிராமம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகப் பகுதிக்குள் அமைந்துள்ளது. அடர்ந்த வனப்பகுதிக்குள் ஒரு கிராமம் உயரமான இடங்களில் இருந்து பார்க்கும்போது. அடர்ந்த வனங்களுக்குள் புதைந்து கிடக்கும் இந்த கிராமத்தின் காட்சி பார்ப்பவர்களை ஆச்சரியப்படுத்தும். மாலை நேரங்களில் அந்த பகுதி இன்னும் ரம்மியமாக காட்சியளிக்கும் என்று அங்கு சென்றவர்கள் கூறுகிறார்கள். இந்த பகுதி, யானை, புலி உள்ளிட்ட வனவிலங்குகளின் முக்கிய நடமாட்டப் பகுதியாக இருப்பதால், சுற்றுச்சூழல் பாதுகாப்பு காரணங்களால் வனத்துறை பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மக்கள் வெளியேற்றம் அதேசமயம், வனப்பகுதியை பாதுகாக்கும் நோக்கில், இந்த கிராமத்தில் வசிக்கும் மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகளும் நடைபெற்று வருகிறது. ஆனால் பல தலைமுறைகளாக அங்கு வாழ்ந்து வரும் சிலர், தங்கள் வாழ்விடத்தை விட்டு வெளியேற விருப்பமில்லை என எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இயற்கை, தனிமை, வனவிலங்குகள், மனித வாழ்க்கை. இந்த நான்கையும் ஒன்றாக இணைத்து நிற்கும் ஒரு வினோதமான கிராமமாகவே 'தெங்குமரஹாடா' இன்று பார்க்கப்படுகிறது. இயற்கையின் சொர்க்கமான இந்த கிராமத்திற்கு வெளியாட்கள் யாருமே போக முடியாது. அந்த ஊரைச் சேர்ந்தவர்கள், அந்த ஊரில் தெரிந்தவர்களுடன் மட்டுமே தற்போது போக முடியும். அதேபோல் தெங்குமரஹாடா கிராமம் சுற்றுலா தலம் அல்ல. அந்த கிராமத்திற்கு வெளியூர் மக்களை வர அனுமதித்தால் வனவிலங்குகளுக்கு அச்சுறுத்தல் என்பதை தாண்டி, இயற்கை அழிக்கப்படும் அபாயம் உள்ளதால் வனத்துறை அனுமதிப்பது இல்லை முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/sirappukatturaigal/natural-wonder-tengumarahad-do-you-know-where-it-is




