அட்லாண்டா உலகக்கோப்பை கால்பந்து தொடரில் இங்கிலாந்துக்கு அணியை வீழ்த்திய அர்ஜென்டினா அணியினர் காட்டிய சர்ச்சைக்குரிய பேனரால் பரபரப்பு ஏற்பட்டது. அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் உள்ள அட்லாண்டா ஸ்டேடியத்தில், உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கான இரண்டாவது அரையிறுதி போட்டி ஒன்றில் நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா மற்றும் முன்னாள் சாம்பியன் இங்கிலாந்து அணிகள் விளையாடின. இதில் போட்டியின் தொடக்கத்தில், இங்கிலாந்து அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது. ஆனால், 2-வது பாதியின் இறுதியில் ஆட்டத்தின் போக்கு தடம் மாறியது. ஆட்டம் முடிவடைய 5 நிமிடங்கள் இருந்தபோது, அடித்த ஒரு கோலும், அடுத்த 7 நிமிட இடைவெளியில் அடித்த 2-வது கோலும் அர்ஜென்டினா அணிக்கு வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தி தந்தது. இறுதி போட்டிக்கும் முன்னேறியது. சர்ச்சைக்குரிய பேனர் இங்கிலாந்துக்கு எதிரான வெற்றியை அடுத்து, அர்ஜென்டினா அணி, பால்க்லாந்து தீவு தொடர்பான சர்ச்சைக்குரிய வாசகங்கள் அடங்கிய பேனர்களை தூக்கி பிடித்தபடி ஆரவாரம் செய்தனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பால்க்லாந்து தீவு அர்ஜென்டினாவுக்கு உரியது என அந்த வாசகத்தில் எழுதப்பட்டு இருந்தது. தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்த இந்த பால்க்லாந்து தீவுகள், இங்கிலாந்து பிராந்தியத்துக்கு உட்பட்டு உள்ளது. ஆனால், அதற்கு பல ஆண்டுகளாக அர்ஜென்டினா இறையாண்மை கோரி வருகிறது. இதுதொடர்பான சர்ச்சையை பிபா உலகக்கோப்பை கால்பந்து தொடரில் கிளப்பும் வகையில் அர்ஜென்டினா அணியினர் பேனரை காட்டியது சர்ச்சையாகி உள்ளது. இதனால், அந்த அணி பிபாவின் தண்டனையை எதிர்கொள்ளக்கூடும் என கூறப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/sports/football/argentina-displays-controversial-banner-is-there-a-chance-of-punishment




