சென்னை, பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு ஈரோடு - சம்பல்பூர், ராமேஸ்வரம் - ஹூப்ளி ரெயில்களின் சேவை நீட்டிக்கப்படுகிறது. இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- ஈரோடு - சம்பல்பூர் சம்பல்பூரில் இருந்து புதன்கிழமைகளில் காலை 11.35 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் இரவு 10.50 மணிக்கு ஈரோட்டை வந்தடையும் வாராந்திர ரெயில் (வண்டி எண் 08311) ஆகஸ்டு 5, 12-ந் தேதிகளில் நீட்டிக்கப்படுகிறது. மறுமார்க்கத்தில், ஈரோட்டில் இருந்து வெள்ளிக்கிழமைகளில் மதியம் 2.35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 11.15 மணிக்கு சம்பல்பூரை சென்றடையும் ரெயில் (08312), ஆகஸ்டு 7, 14-ந் தேதிகளில் நீட்டிக்கப்பபட்டுகிறது. ராமேஸ்வரம் - ஹூப்ளி இதேபோல், ஹூப்ளியில் இருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6.50 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 5.20 மணிக்கு ராமேஸ்வரத்தை வந்தடையும் ரெயில் (07355) ஆகஸ்டு 2, 9, 16, 23, 30 ஆகிய தேதிகளில் நீட்டிக்கப்படுகிறது. மறுமார்க்கத்தில், ராமேஸ்வரத்தில் இருந்து திங்கட்கிழமைகளில் இரவு 10 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் இரவு 7.40 மணிக்கு ஹூப்ளியை சென்றடையும் ரெயில் (07356) ஆகஸ்டு 3, 10, 17, 24, 31 ஆகிய தேதிகளில் நீட்டிக்கப்படுகிறது. இந்த ரெயில்களுக்கான முன்பதிவு தொடங்கிவிட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/extension-of-erodesambalpur-and-rameswaramhubli-train-services




