சென்னை, விநாயகர் சதுர்த்தி பண்டிகை வரும் 14-ந்தேதி(திங்கள்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் பண்டிகைக்கான ஏற்பாடுகள் களைகட்டி வருகின்றன. விநாயகர் சிலை வழிபாடுகள், ஊர்வலத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரை பொது மக்களுக்கு இடையூறின்றி விழாக்கள் நடத்தவும், சிலைகள் கரைப்பு ஊர்வலத்துக்கான ஏற்பாடுகள் குறித்தும், அந்தந்த மாவட்ட அமைப்பாளர்களுக்கு உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. சுற்றுச்சூழலை பாதிக்கும் ரசாயனப் பொருட்களைத் தவிர்த்து முற்றிலும் இயற்கை பொருட்களால் செய்யப்பட்ட சிலைகளையே வழிபாட்டிற்கு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை காவல் எல்லைக்குள் 1,562 சிலைகளை வைத்து வழிபட போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர். பாதுகாப்பு பணியில் 16,500 போலீசார் ஈடுபட உள்ளனர். உரிய அனுமதி இல்லாத இடங்களில் விநாயகர் சிலையை வைத்து வழிபட அனுமதி இல்லை எனவும், கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/vinayagar-chaturthi-police-grant-permission-to-install-and-worship-1562-idols-in-chennai




