சென்னை, கர்நாடக அரசு காவிரியில் தமிழகத்திற்கு நீர் திறந்து விட உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு அவசர மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. நடவடிக்கை அந்த மனுவில், ஏற்கனவே பலமுறை அறிவுறுத்தியும் உரிய நீரை வழங்காத கர்நாடகா அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. போதிய நீர்வரத்து இருக்கும் போதோ அல்லது அணைகள் நிரம்பி வழியும் போது மட்டுமே கர்நாடகா தண்ணீரை திறக்கிறது. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தால் 4 முறை பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை கர்நாடகா பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும். "உரிய நீரை வழங்காத கர்நாடகா அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய 16.01 டி.எம்.சி. நீரை திறந்தவிட உத்தரவு பிறப்பிக்க வேண்டும். தற்போது மேட்டூர் அணையில் உள்ள நீர் 30 முதல் 35 நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவின் பேரில் கர்நாடக அரசு போதுமான நீரை திறந்து விடாத நிலையில், தமிழக அரசு இந்த மனுவை தாக்கல் செய்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/cauvery-water-issue-tamil-nadu-government-files-urgent-petition-in-supreme-court



