இயக்குநர் தயாள் பத்மநாபன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்தின் “காதல் செய்வீர் ” வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழகத்தை உலுக்கிய உண்மை சம்பவமான லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம் கொன்றால் பாவம், மாருதிநகர் காவல்நிலையம் போன்ற படங்களை இயக்கி பிரபலமானவர் தயாள் பத்மநாபன். இவர் தற்போது, உண்மை சம்பவமான லட்சுமிகாந்தன் கொலை வழக்கை மையமாக கொண்டு அதே பெயரில் படத்தை இயக்கியுள்ளார். இதில், வெற்றி, ரங்கராஜ் பாண்டே, பிரிகிடா, லிஸ்ஸி ஆன்டனி, சரவணன், லொள்ளு சபா மாறன், இளவரசு மற்றும் கவிதா பாரதி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் தமிழ் சினிமா வரலாற்றில் நடந்த உண்மைச் சம்பவத்தை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பதிவு செய்துள்ளது. கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியீடு தயாள் பத்மநாபன் இயக்கத்தில் உருவாகியுள்ள லட்சுமிகாந்தன் கொலை வழக்கு திரைப்படத்தை 2எம் சினிமாஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சமீபத்தில் ‘லட்சுமி காந்தன் கொலை வழக்கு’ படத்தின் கதாபாத்திர அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டது. அதில், வெற்றி அறிவுமதி என்ற கைதியாகவும், ரங்கராஜ் பாண்டே சிவானந்தம் என்ற சிறை அதிகாரியாகவும் அறிமுகப்படுத்தப்பட்டனர். பிரிகிடா சாகா மல்லிகாவாகவும், சரவணன் சற்குணமாகவும், லொள்ளு சபா மாறன் மூர்த்தியாகவும், லிசி ஆண்டனி சூடாமணியாகவும், சுப்ரமணியம் சிவா தர்மனாகவும் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் பெரியாரிய சிந்தனையாளரான சுப. வீரபாண்டியன், கதைக்கு வலுவான சித்தாந்த ஆழத்தை சேர்க்கும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படத்திற்கு எம்.வி. பன்னீர்செல்வம் ஒளிப்பதிவு செய்ய, தர்புகா சிவா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் கடந்த ஜனவரி மாதத்தில் நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்திருந்தது. டிரெய்லர் வெளியீடு ‘லட்சுமி காந்தன் கொலை வழக்கு’ படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. தணிக்கை வாரியம் ‘லட்சுமி காந்தன் கொலை வழக்கு’ படத்திற்கு 'யு/ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்நிலையில், ‘லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்தின் ‘காதல் செய்வீர்’ வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் வரும் 10ம் தேதி வெளியாகவுள்ளது. Presenting the Video Song from is out now. ▶️ முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/cinema/cinemanews/lakshmikanthan-kolai-vazhakku-film-kaadhal-seiveer-video-song-out




