ஜியோ ஹாட்ஸ்டார் வெப்சீரிஸில் நல்ல வரவேற்பை பெற்று வரும் சீரிஸ் `Brothers And Sisters'. இந்த சீரிஸில் `கிரிஜா' கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருப்பவர் புரொமோதினி. அவரை நம் அலுவலகத்தில் சந்தித்துப் பேசினோம். `Brothers And Sisters' promodini " தமிழ்ல என்னோட என்ட்ரி விகடன்லதான் ஆச்சு. `ரன்' சீரியலில் நடிச்சிருந்தேன். அப்புறம் ரொம்ப பிரேக் ஆகிடுச்சு. திடீர்னு இந்த சீரிஸூக்காக அழைப்பு வந்துச்சு. முதல்ல `பொன்மலர்' கேரக்டருக்காகத்தான் என்னை ஆடிஷனுக்கு வரச் சொன்னாங்க. அதுக்காக ஆடிஷன் பண்ண பிறகு கிரிஜான்னு ஒரு கதாபாத்திரம் இருக்கு அதுக்கும் ஆடிஷன் கொடுங்கன்னு சொன்னாங்க. அப்ப எனக்கு இந்த கேரக்டர் பத்தி எதுவும் தெரியாது. டைரக்டர் சிதம்பரம் சார் நான் கிரிஜா கேரக்டருக்கு செட்டாவேன்னு சொன்னார். தெலுங்குல நான் ரொம்ப நல்ல அம்மாவாகவும், பாசிட்டிவ் ரோலிலும் தான் நடிச்சிருக்கேன். எங்கேயாச்சும் தப்பா போயிடுமோங்கிற தயக்கம் இருந்துச்சு. டைரக்டர் சார் தான், `நீங்க நினைக்கிற மாதிரி இல்ல. இதை ரொம்ப அழகா டிசைன் பண்ணியிருக்கோம்'னு சொன்னார். ஒரு ஆர்ட்டிஸ்ட்டுக்கு அந்த மாதிரி பர்ஃபார்ம் பண்றதெல்லாம் ரொம்ப கஷ்டம். பர்ஃபார்மன்ஸ் பண்ண நிறைய இடம் இருக்கு. இந்த கேரக்டர் எனக்கு கிடைச்சதுல நான் ரொம்ப ஹாப்பி!" என்றவரிடம் பர்சனல் லைஃப் குறித்துக் கேட்டோம். `Brothers And Sisters' promodini " என்னோட சொந்த ஊர் பெங்களூர். குழந்தை நட்சத்திரமா கன்னட மொழியில் அறிமுகமானேன். நானும் என் சிஸ்டர் பிராஷ்ந்தினியும் ட்வின்ஸ். அம்மாவுக்கு எங்களை பரதநாட்டியத்தில் பெரிய ஆளாக்கணும்னு ஆசை. இப்ப என் தங்கை யூஎஸ்ல பரதநாட்டியம் கத்துக் கொடுத்துட்டிருக்காங்க. நான் கல்யாணத்துக்குப் பிறகு கொஞ்சம் பிரேக் எடுத்திருந்தேன். பிறகு மறுபடி கம்பேக் கொடுத்து இப்ப வரைக்கும் பிசியா நடிச்சிட்டிருக்கேன். என் கணவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்தான். அதான் இவ்ளோ சரளமா தமிழ் பேசுறேன். அவர் எனக்கு மிகப்பெரிய சப்போர்ட். எங்களுக்கு ஒரு பொண்ணு இருக்காங்க. பெங்களூர்ல காலேஜ் படிச்சிட்டிருக்காங்க!" என்றவரிடம் `36 வயதினிலே' ஜோதிகா மாதிரி இருக்கீங்கங்கிற கமென்ட் குறித்துக் கேட்டதும் சிரிக்கிறார். " `இவங்களுக்கு ஜோதிகான்னு நினைப்பு'னுலாம் சொல்றாங்க. அப்படியெல்லாம் இல்லைங்க சிலர் அப்படி சொல்றாங்க. ஒரு விதத்துல பெரிய ஆர்ட்டிஸ்ட்டோட கம்பேர் பண்றது ஹாப்பின்னாலும் ஒரு ஆர்ட்டிஸ்ட் ஆக புரொமோதினியா தெரியணும்னு தான் விரும்புறேன்!" என்றவர் ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ் குறித்து பகிர்ந்து கொண்டார். `Brothers And Sisters' promodini " சிலர் இன்னொரு குடும்பத்தை நாசம் பண்ண வந்துட்ட'ன்னு சிலர் திட்டுறாங்க. ஆனா, அதுவும் எனக்கு பிடிச்சிருக்கு. ஏன்னா, அந்த அளவுக்கு மக்கள் மனசுல கிரிஜா கேரக்டர் பதிஞ்சிருக்குன்னு சந்தோஷம்! இன்னும் சிலர் என் நடிப்பு நல்லா இருக்குன்னும் என்னோட காஸ்டியூம்ஸ் நல்லா இருக்குன்னும் சொல்லுவாங்க!" என்றார். இன்னும் பல விஷயங்கள் குறித்து புரொமோதினி நம்மிடையே பகிர்ந்து கொண்டார். அவற்றை காண லிங்கை கிளிக் செய்யவும்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://cinema.vikatan.com/television/brothers-and-sisters-series-fame-actress-promodini-exclusive-interview




