வாஷிங்டன், ஈரான்-அமெரிக்கா இடையே போர் தாக்குதல் தொடங்கி நேற்று 11-வது நாளாக நீடித்து வருகிறது. இருதரப்புக்கு இடையே தொடர்ந்து நடைபெற்று வரும் தாக் குதல்கள் காரணமாக ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப் பட்டுள்ளது. இதனிடைய அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ஈரானின் தாக்குதல் தொடர்ந்தால் தக்க பதிலடி கொடுப்போம் என எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "இனிவரும் காலங்களில், ஹார்முஸ் நீரிணையில் செல்லும் எந்தவொரு கப்பல் மீதும் ஈரான் ஏவுகணை, ராக்கெட், டிரோன் அல்லது வேறு எந்த ஆயுதத்தைக் கொண்டு தாக்குதல் நடத்தினாலும், அமெரிக்கா அதற்கு பதிலடியாக ஈரானின் ஒரு பாலம் அல்லது மின் உற்பத்தி நிலையத்தை குண்டுவீசி முற்றிலும் அழிக்கும். இது ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் உள்ள உள்கட்டமைப்புகளுக்கும் பொருந்தும்" என தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/world/if-ships-are-attacked-the-us-will-destroy-irans-power-plants-trumps-threat




