சென்னை, புனித ஜார்ஜ் கோட்டையில், புதிய இடத்திற்கு முதல்-அமைச்சர் விஜயின் அலுவலகம் மாறுகிறது சென்னையில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தின் முதன்மைக் கட்டடத்தில்தான் முதல்-அமைச்சரின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், இட நெருக்கடி காரணமாக, முதல்-அமைச்சரின் அலுவலகம் இட மாற்றம் செய்யப்படவுள்ளது. தற்போது, தலைமைச் செயலகத்தின் முதன்மைக் கட்டடத்தில் இயங்கி வரும் முதல்-அமைச்சர் அலுவலக அறையை, அதே வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்றத் திட்டமிடப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் இட நெருக்கடி காரணமாகவும், பொது மக்களின் வருகை அதிகரிப்பைக் கருத்தில்கொண்டும் முதல்-அமைச்சரின் அலுவலக அறையை இட மாற்றம் செய்யத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி, 10 அடுக்குமாடிகள் கொண்ட நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல்-அமைச்சர் விஜய்யின் அலுவலக அறை, அவரது செயலாளர்கள் 4 பேரின் அறைகள் அனைத்தும் 10-ஆவது மாடியில் அமைய விருக்கிறது. இந்தத் தளத்திலிருந்து கடலின் அழகை ரசிக்கும்வகையில் அமையப் பெற்றுள்ளது. நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-ஆவது தளத்தில் பெரிய மாநாடு கூடம் மற்றும் உணவகப் பகுதியை முதல்-அமைச்சரின் அலுவலகமாக மாற்றும் பணியை பொதுப்பணித் துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. முதல்-அமைச்சரின் அலுவலக அறை மாற்றப்படும் இந்தத் தளத்தில் ஏற்கெனவே இயங்கி வரும் தகவல் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை, வணிக வரித் துறையின் சில பிரிவுகளும் வேறு இடங்களுக்கு மாற்றம் செய்யப்படவுள்ளன. ஆகஸ்ட் மாதம் முடிவதற்குள் முதல்-அமைச்சரின் அலுவலக அறை இட மாற்றம் முடிவடைந்து விடும் எனக் கூறப்படுகிறது. தமிழக முதல்-அமைச்சர்களிலேயே பாரம்பரிய அலுவலகக் கட்டடத்திலிருந்து புதிய இடத்துக்கு அலுவலகத்தை மாற்றும் முதல் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்தான் என்பது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/the-chief-ministers-office-will-move-to-a-new-location-in-the-secretariat




