நாகோன், மின்கம்பத்தில் கார் மோதி தீப்பற்றி எரிந்த விபத்தில் 3 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர். மின்கம்பத்தில் கார் மோதி விபத்து அருணாச்சல பிரதேசத்தில் இருந்து கவுகாத்தி நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில், 5 பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர். நாகோன் மாவட்டம் புரானிகுடாம் பகுதியில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் அருகில் இருந்த மின்கம்பத்தில் பலமாக மோதியது. மோதிய சில நிமிடங்களில் கார் திடீரென தீப்பற்றி கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் காருக்குள் சிக்கியிருந்த 3 பேரால் வெளியேற முடியவில்லை. அவர்கள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் படுகாயமடைந்த விகாஸ் குமார் மற்றும் சோனு குமார் ஆகிய இருவரை மீட்புப் படையினர் மீட்டு, மேல் சிகிச்சைக்காக குவஹாத்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணை இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புப் படையினர், காரில் பற்றிய தீயை போராடி அணைத்தனர். பின்னர் காவல்துறையினர் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 3 பேரின் உடல்களை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து புரானிகுடாம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/india/car-crashes-into-electric-pole-causes-massive-fire-3-people-die-in-charred-bodies-2-seriously-injured




