சென்னை, சென்னையில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை ஒவ்வொரு பகுதி அலுவலகங்களிலும் ஒரு மேற்பார்வை என்ஜினீயர் தலைமையில் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறும். இதுதொடர்பாக, சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- குறை தீர்க்கும் கூட்டம் சென்னை குடிநீர் வாரியம் சார்பில் இந்த மாதத்துக்கான குறை தீர்க்கும் கூட்டம் இன்று 15 மண்டலங்களில் உள்ள குடிநீர் வாரிய அனைத்து பகுதி அலுவலகங்களிலும் நடை பெறுகிறது. காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை ஒவ்வொரு பகுதி அலுவலகங்களிலும் ஒரு மேற்பார்வை என்ஜினீயர் தலைமையில் கூட்டம் நடைபெறும். இதில் பொதுமக்கள் பங்கேற்று குடிநீர், கழிவுநீர் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், குடிநீர், கழிவு நீர் வரி மற்றும் கட்டணங்கள், நிலுவையில் உள்ள குடிநீர், கழிவுநீர் புதிய இணைப்புகள் தொடர்பான சந்தேகங்களை மனுக்கள் வாயிலாக தெரிவித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/water-supply-board-grievance-redressal-meeting-in-chennai-today




