சில மாதங்களுக்கு முன்பு அதிமுகவிலிருந்து விலகிய முன்னாள் அமைச்சர் செம்மலை, இன்று தாராபுரத்தில் முதல்வர் விஜய் முன்னிலையில் தவெகவில் இணையவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. செம்மலை செம்மலை தவெகவில் இணைகிறாரா என்பதை அறிய உள்விவகாரங்கள் அறிந்த சிலரிடம் பேச்சுக் கொடுத்தோம், 'செம்மலை எம்.ஜி.ஆர் காலத்து அதிமுகக்காரர். கட்சியின் முக்கிய சீனியர். ஓ.பி.எஸ் தர்மயுத்தம் தொடங்கிய போது அவருக்கு ஆதரவாக வந்த எம்.எல்.ஏக்களில் ஒருவர். பின்னர் எடப்பாடி அணிக்கே திரும்பிவிட்டார். ஆனால், பெரியளவில் முக்கியத்துவம் இல்லாமல் இருந்தார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே திமுகவும் தவெகவும் அவருக்கு மாறி மாறி வலைவிரித்தனர். செம்மலை எல்லாரிடமும் பேசினார். ஆனால், அதிமுகவிலிருந்து விலகி இன்னொரு கட்சியில் இணைவதை அவர் விரும்பவில்லை. அதனால் வந்த ஆபர்கள் எதையும் அவர் ஏற்கவில்லை. செம்மலை இந்நிலையில்தான் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு அதிமுகவில் நடந்த உட்கட்சி பூசல்களை குறிப்பிட்டு 'கற்பூரம் கரையலாம், கட்சி கரையலாமா.மனசு நோகுதய்யா.' என வேதனைப்பட்டு அறிக்கை வெளியிட்டு அதிமுகவிலிருந்து விலகினார். அதன்பிறகு சில வாரங்கள் நிம்மதியாக அமெரிக்காவில் தங்கியிருந்தார். 'இனிமே அரசியல்ல ஈடுபடுற ஆர்வமெல்லாம் இல்லங்க.' என்றே நெருங்கியவர்களிடமும் பகிர்ந்திருக்கிறார். ஆனால், செம்மலையின் மகனுக்கு தவெகவில் இணைய வேண்டுமென விருப்பம். அதற்காக அவர் சிலர் மூலம் தூதுவிட்டும் பார்த்திருக்கிறார். சேலத்து அமைச்சரான பார்த்திபனை அடிக்கடி சந்தித்து கட்சியில் இணைவதைப் பற்றி பேசியிருக்கிறார். ஆனால், தவெக தலைமை செம்மலையின் மகனை மட்டும் கட்சியில் இணைப்பதில் ஆர்வம் காட்டவில்லை. செம்மலையோடு வந்தால் எம்.ஜி.ஆர் காலத்து அதிமுகக்காரர் விஜய்யை இன்னொரு எம்.ஜி.ஆராக பார்த்து கட்சியில் இணைகிறார் என்கிற இமேஜை உண்டாக்கலாம் என நினைக்கிறது. செம்மலைக்கு இதில் உடன்பாடில்லை. ஒருவேளை செம்மலை இன்று தவெகவில் இணைந்தால், அது மகனின் விருப்பத்துக்காகவும் எதிர்காலத்துக்காகவும் மட்டுமே இருக்கும்' என்றனர். இடைத்தேர்தல் சமயத்தில் செம்மலை தவெகவில் இணைந்தால் தாராபுரத்தில் சமூகரீதியாக சில கணக்குகள் தங்களுக்கு சாதகமாக மாறும் என தவெக தலைமை நம்புகிறது. சமூகக் கணக்குகளை மனதில் வைத்துதான் சமீபத்தில் அதிமுகவிலிருந்து வந்த மடத்துக்குளம் மகேந்திரனுக்கும் மாவட்டச் செயலாளர் பதவியை கொடுத்திருந்தனர். செம்மலையை வைத்து தவெக ஒரு கணக்கு போடுகிறது. செம்மலை என்ன முடிவெடுக்கப் போகிறார்? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.vikatan.com/government-and-politics/semmalai-to-join-tvk-for-his-son-whats-the-story-behind-it




