6 மாதங்களுக்கு மேலாக, ரேஷன் கார்டைப் பயன்படுத்தாமல் வைத்திருக்கிறீர்களா? நாளை (அக்டோபர் 1) உங்கள் ரேஷன் கார்டு முடக்கப்படலாம். இறந்தவர்களின் பெயரில் ரேஷன் கார்டு வைத்திருப்பது, ஒன்றுக்கும் மேற்பட்ட ரேஷன் கார்டு வைத்திருப்பது, இடம்பெயர்ந்த பின் இரண்டு பகுதிகளில் ரேஷன் கார்டு வைத்திருப்பது போன்ற தகுதியில்லாத ரேஷன் கார்டுகளை முடக்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக 6 மாதங்களுக்கு மேல் பயன்படுத்தாத ரேஷன் கார்டுகள் நாளை முதல் தற்காலிகமாக முடக்கப்பட உள்ளன. மத்திய அரசு'வெளியில் சொன்னால் என்ன ஆகுமோ?'- Silicon Valley-யில் மறைக்கப்படும் பாலியல் சம்பவங்கள்; பகீர் பின்னணி இந்தியா முழுவதும் 20.4 கோடி ரேஷன் கார்டுகள் மூலம் 80.6 கோடி பேர் பயன்பெற்று வருகின்றனர். இதில் 6 மாதங்களாக ரேஷன் கார்டைப் பயன்படுத்தாத 1.58 கோடி பேர்களின் பெயர்களை முடக்க இந்த முன்னெடுப்பு. உங்களுடைய ரேஷன் கார்டு முடக்கப்பட்டுவிட்டால். ஒருவேளை, நீங்கள் 6 மாதங்களாக ரேஷன் கார்டு பயன்படுத்தாமல் இருந்திருந்தால், பிரச்னை இல்லை. உங்களது ரேஷன் கார்டு தற்காலிகமாக ‘மூன்று மாதங்களுக்கு’ முதலில் முடக்கப்படும். இந்த மூன்று மாதக் காலத்தில் உங்களது KYC அப்டேட்டைச் செய்துவிட்டால், மீண்டும் உங்களது ரேஷன் கார்டைப் பயன்படுத்திக்கொள்ளலாம். மூன்று மாதங்களுக்குப் பின்னும், KYC அப்டேட் செய்யப்படாத ரேஷன் கார்டுகள்தான் முற்றிலும் முடக்கப்படும். இதனால், மூன்று மாதங்களுக்குள் உங்கள் KYC-ஐப் பக்காவாக அப்டேட் செய்துவிடுங்கள் மக்களே! ஜம்மு காஷ்மீர்: CISF வீரர்களிடையே வாக்குவாதம்; 4 வீரர்களைச் சுட்டுக்கொன்ற தலைமைக் காவலர் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.vikatan.com/government-and-politics/ration-card-alert-158-million-inactive-cards-to-be-disabled




