தூத்துக்குடி, தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் ஆனி கொடை விழா சமீபத்தில் நிறைவடைந்தது. இதையடுத்து நேற்று கோவிலில் உள்ள உண்டியல்களில் அன்னதான உண்டியல் தவிர 10 உண்டியல்கள் மற்றும் தற்காலிக உண்டியல்கள் 6 என மொத்தம் 16 உண்டியல்கள் திறக்கப்படும் காணிக்கை பணம் மற்றும் நகைகள் எண்ணப்பட்டன. கோவிந்தம்மாள் ஆதித்தனார் கல்லூரி முதல்வர் ஜான்சிராணி வழிகாட்டுதல்படி மாணவிகள், கோவில் பணியாளர்கள், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் அலுவலர்கள் மற்றும் தூத்துக்குடி ஆஞ்சநேயா உழவார பணியாளர்கள் உண்டியல் காணிக்கை பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். கடந்த ஆண்டைவிட அதிகம் உண்டியலில் 19 லட்சத்து 70 ஆயிரத்து 37 ரூபாயும், 15 கிராம் தங்கம் மற்றும் 135 கிராம் வெள்ளியும் இருந்தது. கடந்த ஆண்டு நடைபெற்ற கொடைவிழா உண்டியல் வரவை விட ரூ.3.70 லட்சம் அதிகமாக இருந்தது. இந்த காணிக்கை பணம் தென்திருப்பேரை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் குரங்கணி முத்துமலை அம்மன் கோவில் கணக்கில் செலுத்தப்பட்டது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/devotional/kurangani-muthumalai-amman-temple-aani-festival-hundi-offerings-1970-lakh




