செங்கல்பட்டு, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே பெருங்கருணை கிராமத்தில் மலையின் மீது பால தண்டாயுதபாணி கோவில் அமைந்துள்ளது. சென்னையில் உள்ள வடபழனி முருகன் கோவில் மற்றும் பழனியில் உள்ள முருகன் கோவிலுக்கு நடுவில் இருப்பதால் இந்த கோவிலை முருக பக்தர்கள் நடுபழனி முருகன் கோவில் என்று அழைக்கின்றனர். இந்த கோவிலில் மரகதத்தால் ஆன மூலவர் முருகர் சிலை இருந்தது. இந்த நிலையில், நேற்று இரவு மர்ம நபர்கள் கோவிலின் பூட்டை உடைத்து கருவறையில் இருந்த சுமார் 2 அடி உயர மரகதத்தினால் ஆன முருகர் சிலையை திருடிச் சென்றுள்ளனர். இதையடுத்து கோவில் தரப்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், முருகர் சிலையை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருடுபோன முருகர் சிலையின் மதிப்பு பல லட்சம் முதல் கோடிகள் வரை இருக்கும் என கூறப்படுகிறது. முருகர் கோவிலில் மரகதத்தினால் ஆன முருகர் சிலை திருடப்பட்டிருப்பது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/emerald-murugan-idol-stolen-near-chengalpattu




