தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாள்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று இரவும் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் மழை பெய்தது. சில இடங்களில் இன்னும் மழை தொடர்ந்துகொண்டிருக்கிறது. இந்த நிலையில், இன்று காலை 10 மணி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழை தொடரலாம் என்பதைச் சென்னை வானிலை ஆய்வு மையம் தரவுகளை வெளியிட்டுள்ளது. சென்னை வானிலை மையத்தின் தரவுகள்மோடி - ட்ரம்ப் சந்திப்பு: செய்தியாளர் கேள்வி-பதில் 'நோ' சொன்ன இந்தியா; மறந்துப்போன ட்ரம்ப், பிறகு. சென்னை வானிலை மையத்தின் தரவுகள் அதன்படி, 10 மணி வரை, கோவை, திண்டுக்கல், கன்னியாகுமரி, மதுரை, தென்காசி, தேனி, நீலகிரி, திருநெல்வேலி, திருப்பூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை வரை பெய்யலாம். செங்கல்பட்டு, கடலூர், காஞ்சிபுரம், பெரம்பலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் லேசான மழை இருக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையில் மழை பெய்யுமா? நேற்று இரவு சென்னையின் பெரும்பாலான இடங்களில் நல்ல மழை பெய்தது. ஆனால், காலையில் இல்லை. சென்னை வானிலை ஆய்வு மையமும் மழை பெய்யும் இடங்களின் தரவுகளில் சென்னை பெயரைக் குறிப்பிடவில்லை. இதனால், வானிலை மையத்தின் தரவுகளின்படி, காலையில் சென்னையில் மழை இருக்காது என்று தெரிகிறது. Gold: மீண்டும் ரூ.1.20 லட்சத்தைத் தாண்டிய தங்கம் விலை; என்னதான் காரணம் இதற்கு? இன்னும் உயருமா? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.vikatan.com/environment/weather/tamil-nadu-rain-alert-15-districts-may-get-rain-till-10-am




