திருவண்ணாமலை எம்.பி-யும் தி.மு.க இளைஞரணி மாவட்ட அமைப்பாளருமான சி.என்.அண்ணாதுரையின் வீடு மற்றும் அவர் தொடர்புடைய பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறைப் போலீஸார் இன்று காலை முதலே தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்தாக வந்த புகாரின் அடிப்படையில் சோதனை நடைபெறுவதாகக் கூறப்படுகிற நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பிலிருந்து சோனைக்கான காரணம் குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்களை இன்னும் வெளியிடவில்லை. இதனிடையே, `ஏ.பி.யு’ என்கிற கட்டுமான நிறுவனத்தையும் நடத்தி வருகிறார் சி.என்.அண்ணாதுரை. கடந்த 14-12-2025 அன்று, திருவண்ணாமலை மலப்பாம்பாடியில் வடக்கு மண்டல தி.மு.க இளைஞரணி நிர்வாகிகள் மாநாடு நடைபெற்றது. எம்.பி சி.என்.அண்ணாதுரை இந்த மாநாட்டுக்கான திடல் அமைக்க அருகிலுள்ள மலப்பாம்பாடி ஏரியில் இருந்து ஆயிரக்கணக்கான லோடு மண் சட்டத்துக்குப் புறம்பாக அள்ளப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த முறைகேடான செயல் மூலம் அரசுக்கு சுமார் ரூ.8 கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டதாகவும், எம்.பி அண்ணாதுரையின் ஏ.பி.யு கட்டுமான நிறுவனத்துக்குச் சொந்தமான பொக்லைன் இயந்திரங்களும், லாரிகளும் பயன்படுத்தப்பட்டதாக அறப்போர் இயக்கம் சமீபத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகாரளித்தது. இந்த புகார் மீதான விசாரணையின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறையின் சோதனை நடைபெறலாம் என்கிற தகவலும் வெளியாகியிருக்கிறது. சோதனை நிறைவுற்ற பிறகே விவரங்கள் முழுவிபரங்கள் வெளிவரக்கூடும் என்பதால், இந்த அதிரடி சோதனை தி.மு.க-வினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.vikatan.com/government-and-politics/anti-corruption-department-takes-swift-decisive-action-against-tiruvannamalai-dmk-mp-annadurai




