சபரிமலை அய்யப்பன் கோவிலில் புரட்டாசி மாத பூஜைக்காக கோவில் நடை கடந்த 16-ந் தேதி திறக்கப்பட்டது. நடை இன்று (திங்கட்கி ழமை) அடைக்கப்படுகிறது. அரவணை உற்பத் தியில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக பக்தர்களின் தேவைக்கு ஏற்ப வினியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ஒரு பக்தருக்கு 3 டின் அரவணை வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அது ஒன்றாக குறைக்கப்பட்டது. அதையும் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கூடுதல் அரவணைக்காக பக்தர்கள் மீண்டும் மீண்டும் வரிசையில் நின்று பெற்று சென்றனர். இதனால் அரவணை கவுண்ட்டரில் 24 மணி நேரமும் கட்டுக்கடங்காத கூட்டம் நிரம்பி வழிந்தது. பல பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்தும் அரவணை பிரசாதம் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் வீடுகளுக்கு திரும்பினர். முதல் முறையாக தட்டுப்பாடு இதுகுறித்து சென்னையை சேர்ந்த பக்தர் ராஜ் கூறுகையில், 'சபரிமலை தரிசனத்திற்கு நான் பலமுறை வந்துள்ளேன். சிலநேரம் கூட்டம் காரணமாக காத்திருந்து அரவணை பிரசாதத்தை பெற்று செல்வேன். ஆனால் முதன் முறையாக தட்டுப்பாடு காரணமாக அரவணை பெற முடியாமல் வீடு திரும்பும் நிலை ஏற்பட்டது' என்றார்.அரவணை தட்டுப்பாடு குறித்து திருவதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'அரவணை தயாரிப்பதற்கான புதிய மையம் அமைக்கும் பணி நடைபெறுவதால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் புரட்டாசி மாத பூஜைக்கு எதிர்பாராத அளவில் கூடுதல் பக்தர்கள் வந்ததும் ஒரு காரணம். ஆனாலும் கூடுதலாக அரவணை தயாரிக்க நட வடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என்றார். மந்திரி கண்டனம் இந்த விவகாரம் தொடர்பாக மாநில தேவஸ்தான துறை மந்திரி முரளீதரன் கூறுகையில், 'மாத பூஜை காலங்களில் சபரிமலையில் அரவணை உற்பத்தியை நிறுத்தி வைத்து புதிய மையம் அமைக்கும் பணியை செய்திருக்க கூடாது. திருவிதாங்கூர் தேவஸ்தானத்தின் சரியான திட்டமிடல் இல்லாத செயல்பாடுகளே இதற்கு காரணம். தட்டுப்பாடு குறித்து விசாரணை நடத்தப்படும்' என்றார்.சபரிமலையில் நடந்த தங்கம் கொள்ளை சம்பவத்திற்கு பிறகு அரசுக்கும், திருவிதாங்கூர் தேவஸ்தான வாரியத்திற்கும் இடையே கொள்கை முரண்பாடு கருத்து வேறுபாடு இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/india/severe-shortage-of-aravana-prasadam-at-sabarimala-devotees-disappointed




