திருச்செந்தூர் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆனந்த முருகன் (வயது 51). இவர் கோவில் வாசல் பகுதியில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வருகிறார். அதேபோல் ஆறுமுகநேரி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் மாதவன் தினேஷ் (26). திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரி அருகே உள்ள ஸ்டாண்டில் ஆட்டோ ஒட்டி வருகிறார். இவர் நேற்று முன்தினம் பயணிகளை ஏற்றிச்சென்று கோவில் வாசல் அருகே இறக்கி விட்டுள்ளார். அங்கிருந்து வேறு பயணிகளை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு புறப்பட தயாராகி உள்ளார். இதற்கு கோவில் வாசல் ஆட்டோ ஸ்டாண்டு டிரைவர்கள் சேர்ந்து ஆனந்தமுருகன், தங்களுக்கு வாடகை பாதிக்கப்படுவதாக கூறி தினேஷை கண்டித்துள்ளார். இதையடுத்து ஆனந்த முருகனுக்கும், மாதவன் தினேஷூவுக்கும் இடையே வாக்குவா தம் ஏற்பட்டுள்ளது. அரிவாள் வெட்டு இந்த வாக்குவாதம் முற்றியதில், ஆனந்தமுருகன் தான் மறைத்து வைத் திருந்த அரிவாளால் திடீரென மாதவன்தினேஷை சரமாரியாக வெட்டியுள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் சிதறி ஓடினர். ஆட் டோவில் இருந்தவர்களும் இறங்கி ஓட்டம் பிடித்தனர்.அப்போது, அதே அரிவாளை பிடுங்கிய மாதவன்தினேஷ் சரமாரியாக ஆனந்த முருகனை வெட்டியுள்ளார். இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். அங்கிருந்த சக ஆட்டோ டிரைவர்கள், அந்த 2 பேரையும் மீட்டு திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு 2பேருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக ஆனந்த முருகன் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கும், மாதவன், தினேஷ் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். அந்த ஆஸ்பத்திரிகளில் 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்த திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/dispute-over-picking-up-passengers-in-tiruchendur-commotion-as-auto-rickshaw-drivers-hack-each-other-with-sickles




