கோவை, ஆசிய விளையாட்டு பெண்கள் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் வெண்கலப்பதக்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த வித்யாவுக்கு முன்னாள் பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- வெண்கலப் பதக்கம் ஜப்பானில் நடைபெறும் ஆசியவிளையாட்டுப்போட்டிகள் 2026 -ல் பெண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில் வெண்கலப் பதக்கம் வென்று, நமது நாட்டிற்கு அளவற்ற பெருமையைப் பெற்றுத் தந்த கோயம்புத்தூரின் நட்சத்திர வீராங்கனை வித்யா ராமராஜுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! உங்களின் இந்த மகத்தான சாதனைப் பயணம் மேலும் பல உயரங்களைத் தொடட்டும். உங்கள் வெற்றி, தலைமுறை தலைமுறையாக வரும் இளம் விளையாட்டு வீரர்களுக்கு உத்வேகமும் ஊக்கமும் அளிக்கும்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/vanathi-srinivasan-congratulates-vidya-on-winning-the-bronze-medal-at-the-asian-games




