சீக்கிரம் பணக்காரர் ஆவதற்கு வழி ஆந்திர மாநிலம், அனந்தபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் அனந்தபுரம் நகரத்தில் ஓட்டல் வைப்பதற்காக குடி பெயர்த்தார். அப்போது அனந்தபுரத்தை சேர்ந்த மகாலட்சமி என்ற பெண் அறிமுகமானார். அவர் ஓட்டல் தொழில் செய்தால் என்ன பயன், சீக்கிரம் பணக்காரர் ஆவதற்கு ஒரு வழியை சொல்கிறேன் என தெரிவித்தார். உங்களது மகளை நிர்வாணமாக வைத்து பூஜை செய்தால் தானாகவே பணமும், செல்வமும் வந்து கொட்டும் என ஆசை வார்த்தைகளை கூறினார். இதற்கு சிறுமியின் பெற்றோர் முதலில் மறுப்பு தெரிவித்தனர். தொடர்ந்து வற்புறுத்தியதால் ஒப்புக்கொண்டனர். நிர்வாண பூஜை இந்த நிலையில் ஹேமந்த் என்ற மந்திரவாதியை வரவழைத்தனர். அவர் சிறுமியை ரகசிய இடத்திற்கு அழைத்துச் சென்று அவரது ஆடைகளை கலைந்து நிர்வாணமாக்கி சிறுமியை தவறான முறையில் தொட்டபடியே தில்லாங்கடியான பூஜைகளை செய்தார். சில நாட்கள் கழித்து பூஜை பலன் அளிக்காததால் மீண்டும் பூஜை செய்ய வேண்டும் என கூறினார். கடந்த 6 மாதங்களாக சிறுமியை நிர்வாணமாக வைத்து பூஜைகள் செய்து வத்தார். கடந்த 8-ந் தேதி தனது மகன்களான பாலசுப்பிரமணியம், விஜயகுமார் ஆகியோருடன் வந்து மீண்டும் பூஜை செய்தார். இந்த முறையும் சரியாக பூஜை செய்ய வில்லை. அதனால் கடப்பாவிற்கு செல்ல வேண்டும் என தெரிவித்தார். போலி மந்திரவாதி சிறுமி மற்றும் அவரது தாயை காரில் கடப்பாவிற்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்த போலி மந்திரவாதி வெங்கடேஷ் என்பவர் பூஜை செய்தார். பின்னர் பாக்கிய லட்சுமி என்பவரது வீட்டில் தாயையும், மகளையும் அடைத்து வைத்தனர். கடந்த 11-த் தேதி மீண்டும் பூஜை செய்வதற்காக சிறுமியை காரில் ஏற்றினர். அப்போது சிறுமி கத்தி கூச்சலிட்டார். இதனை கவனித்த உள்ளூர் மக்கள் போலீசாருக்கு தகயல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர் இதனையறிந்த பூஜை செய்யும் கும்பல் தாய், மகளை இறக்கிவிட்டு காரில் தப்பி சென்றனர். பாதிக்கப்பட்டவர்கள் வல்லூர் போலீசில் புகார் செய்தனர், போலீசார் மகாலட்சுமி, ஹேமந்த், பால சுப்ரமணியம், வெங்கடேஷ் ஆகியோர் மீது போக்சோ ட்டத்தில் வழக்கு பதிவு செய்தனர். இந்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/india/a-woman-who-wanted-money-to-pour-out-dillalangadi-puja-performed-by-a-fake-magician




