சென்னை, தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வந்தது. சென்னையில் நேற்று முன்தினம் தங்கம் ஒரு கிராம் ரூ.14,175-க்கும், சவரன் ரூ.1,13,400-க்கும் விற்பனையானது. நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,800 சரிந்து ரூ.1,11,600-க்கும், கிராமுக்கு ரூ.225 குறைந்து, ரூ.13,950-க்கும் விற்பனையானது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.2,320 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,13,920-க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.290 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் உயர்ந்து, வெள்ளி ஒரு கிராம் ரூ.255-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/business/gold-rate-chennai/gold-price-jumps-rs-2320-per-sovereign-todays-rate




