தாராபுரம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகாவை ஆதரித்து நேற்று (செப்.23) தேர்தல் பிரசாரம் செய்திருந்தார் சீமான். அப்போது பேசிய அவர், "என்ன நடக்குது இப்போ? இந்தத் தேர்தலயே எடுத்துக்கொள்வோம். அதிமுகவில் இரட்டை இலை சின்னத்தில் நின்று வென்ற சத்தியபாமா அவர்கள் எதற்காக பதவி விலகினார்கள் என்று யாராவது ஒருவர் கேட்க வேண்டுமல்லவா? இந்தக் கட்சியிலிருந்து அந்தக் கட்சிக்குப் போக வேண்டிய அவசியம் என்ன? தேவை என்ன? அதே பதவிக்கு மீண்டும் இதே நிலத்தில் போட்டியிட வேண்டிய அவசியம் என்ன? தலைவர் யார்? சீமான் ஊழல் சக்தி என்றார். அதைத் தீய சக்தி என்றார். தீய சக்தி என்று சொல்லப்பட்ட கட்சியில் ஓட்டு வாங்கி வென்றவர்களைத்தான் கட்சியில் வைத்துக்கொண்டு ஆட்சி அமர்திருக்கிறார். ஊழல் சக்தி என்று சொல்லப்பட்ட கட்சியில் வென்று வந்தவர்களைத்தான் கூடச் சேர்த்துக்கொண்டு இப்போது தேர்தலைச் சந்திக்கிறார். அவரிடம் போனால் என்ன, வாஷிங் மெஷின் வைத்திருக்கிறாரா? துவைத்துத் தூய்மைப்படுத்திவிடுவாரா? இடைத்தேர்தல்: "முதல்வர் அதிக நம்பிக்கையை கொடுத்திருக்கிறார்"- தவெகவுக்கு ஆதரவு தெரிவித்த ஜி.கே வாசன் இப்போது இரட்டை இலையில் நின்று வென்றவர்கள் விசில் சின்னத்தில் நிற்கிறார்கள். நீங்களே யோசித்துப் பாருங்கள். இந்தத் தேர்தல் ஒரு தனி மனிதருடைய சொந்த விருப்பத்துக்காக நடக்கிறதா? அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்தவருக்கும் இப்போது தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளராக நிற்பவருக்கும் என்ன வித்தியாசம்? இந்த மண்ணில் எந்த மாற்றமும் நிகழவில்லை. இவர்கள் நிகழ்த்த போவதும் இல்லை என்று நான் சொல்கிறேன். ஒரே ஒரு மாற்றம்தான். வேட்டி, சட்டைக்குப் பதிலாக கோட், சூட். சீமான் எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி வைத்தால் என்னை துணை முதலமைச்சர் ஆக்குவதாகச் சொன்னார் ஆதவ் அர்ஜுனா. நாங்கள் ஒத்துக்கொள்ளவில்லை என்பதால் வேளாண்துறை அமைச்சர் ஆக்குகிறோம் என்றார். எங்களுக்கு உடன்பாடு இல்லை என வெளிப்படையாகத் தெரிவித்துவிட்டோம்" என்று பேசியிருக்கிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.vikatan.com/government-and-politics/ntk-seeman-about-tvk-aadhav-arjuna




