சென்னை, புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு பிறந்தநாளை முன்னிட்டு, தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு தனது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் முதல்-அமைச்சர் விஜய். புதுச்சேரி முதல்-அமைச்சர் என். ரங்கசாமி இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இதனையொட்டி, அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக முதல்-அமைச்சர் விஜய், தொலைபேசி வாயிலாக புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு வாழ்த்து தெரிவித்தார். இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- பிறந்தநாள் வாழ்த்து தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் இன்று, புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி பிறந்தநாளை முன்னிட்டு, அவரைத் தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு தனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாண்புமிகு புதுச்சேரி முதலமைச்சர் அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் பிறந்தநாள் வாழ்த்து. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/birthday-wishes-for-rangaswamy-chief-minister-vijay




