கலசபாக்கம், ஆந்திர மாநிலத்தில் இருந்து தக்காளி ஏற்றிக்கொண்டு திருவண்ணாமலை நோக்கி வந்த லாரி, கலசபாக்கம் அருகே சாலை ஓர மரத்தில் மோதிய விபத்தில் டிரைவர் உயிரிழந்தார். கிளீனர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து ஆந்திர மாநிலத்தில் இருந்து தக்காளி லோடு ஏற்றிக்கொண்டு வந்த லாரியை, செங்கம் அருகே பாய்ச்சல் கிராமத்தைச் சேர்ந்த சரவணன் (42) ஓட்டினார். அவருடன் திருவண்ணாமலை பாலாஜி நகரைச் சேர்ந்த சேகரன் (42) கிளீனராக பயணித்தார். நேற்று அதிகாலை கலசபாக்கம் அருகே கொண்டம் காரியந்தல் பகுதியில் வந்தபோது, லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த மரத்தில் மோதியது. இந்த விபத்தில் லாரியின் முன்பகுதி முற்றிலும் நொறுங்கியது. உடனடியாக அப்பகுதி மக்கள், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியினர், கலசபாக்கம் போலீசார் ஆகியோர் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் டிரைவர் சரவணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த கிளீனர் சேகரன், சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து கலசபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/truck-crashes-into-a-tree-near-tiruvannamalai-driver-killed




