சென்னை, தமிழ்நாட்டில் உள்ள காற்றாலை மின் நிலையங்களில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை, 1,044.67 கோடி யூனிட் மின்சாரம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றாலை மின் உற்பத்தி இந்தியாவில் குஜராத்துக்கு அடுத்தப்படியாக தமிழ்நாடு அதிக காற்றாலை மின் கட்டமைப்பை கொண்டுள்ளது. தமிழகத்தில் தனியார் நிறுவனங்கள் தற்போதைய நிலவரப்படி, 9,527 மெகா வாட் திறனில், காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களை அமைத்து உள்ளன. மே மாதம் முதல் செப்டம்பர் வரை காற்றாலை சீசன். இருப்பினும், ஏப்ரல் முதலே காற்றாலைகளில் மின்சாரம் கிடைக்கிறது. இந்த சீசனில் காற்றின் வேகம் அதிகம் இருந்ததால், காற்றாலை மின் நிலையங்களில் இருந்து தினமும் சராசரியாக, 8 கோடி யூனிட் மின்சாரம் கிடைத்தது. இதன்படி இந்தாண்டு ஏப்ரல் 1ம் தேடி முதல் ஆகஸ்ட் 31ம் தேதி வரை, 1,044.67 கோடி யூனிட் மின்சாரம் கிடைத்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலத்தில் 1,011.20 கோடி யூனிட்டாக இருந்தது. இந்த ஆண்டில் 33 கோடி யூனிட் கூடுதலாக கிடைத்துள்ளது. வரும் நாட்களில் காற்றின் வேகம் மேலும் அதிகரித்தால், காற்றாலை மின் உற்பத்தி மிக அதிக அளவை எட்டும் என தகவல் வெளியாகி உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/wind-power-generation-in-tamil-nadu-rises-to-1045-billion-units




