90’ஸ், 2000-களில் வெளியான பல தமிழ் திரைப்படங்களில் நடிகர் வையாபுரி கட்டாயம் நடித்திருப்பார். அதன் பிறகும், அவர் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும், அவருடைய ‘கரியர் பீக்’ என்று 90’ஸ் மற்றும் 2000-த்தைக் கூறலாம். பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளராகக் கலந்துகொண்டிருந்தார். இவர் நேற்று முன்தினம் (செப்டம்பர் 2), இன்ஸ்டாகிராமில் 1 லட்சம் ஃபாலோயர்களை எட்டியதையொட்டி எமோஷனலான வீடியோ ஒன்றைப் போஸ்ட் செய்திருந்தார். அந்த வீடியோவில் வையாபுரி, “நான் இன்ஸ்டாகிராமில் சேர்ந்த ஒரு மாசத்துலேயே ஒரு லட்சம் பேர் ஃபாலோ பண்றாங்க. அதுல ரொம்ப மகிழ்ச்சி. நடிகர் வையாபுரி`Rapido நிறுவனத்தால் மட்டுமே 2.5 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு; எனவே, மாநில அரசுகள்.' - நிதின் கட்கரி நான் ஏன் இன்ஸ்டாகிராமில் சேர்ந்தேன்னா, ஒரு பெரிய புரொடக்ஷன் மேனேஜர், டைரக்டரைப் பார்ப்பதற்காக என்னை ஆபீஸுக்குக் கூப்பிட்டிருந்தாரு. ஆனால், அந்த டைரக்டரோ, ‘அவரு பழைய ஆர்டிஸ்ட். நான் இல்லை’னு சொல்லிடுங்கனு சொன்னாரு. எனக்கு ரொம்ப சங்கடமா இருந்துச்சு. அந்த மேனேஜர் வெளிய வந்ததும், ‘டைரக்டருக்கு உங்கள பாக்க விருப்பமில்லையாம்’னு சொன்னாரு. இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக்ல இருந்து நெறைய பேர் புதுசு புதுசா வர்றாங்க. இவரு ரொம்ப பழசுனு சொல்லியிருக்காரு. இது என் மனசை ரொம்ப பாதிச்சுருச்சு. அதுக்குப் பிறகுதான், நாம ஏன் இன்ஸ்டாகிராம் ஆரம்பிக்கக்கூடாதுனுதான் ஆரம்பிச்சேன். புது டைரக்டர்களுக்கு இன்ஸ்டா, ஃபேஸ்புக் பிடிச்சுருக்கு. அதுக்காக அவங்களுக்கு நியாபகப்படுத்தறதுக்காவது அனுபவத்தை ஷேர் பண்ணிக்கலாம்னுதான் ஆரம்பிச்சேன். இந்த ஒரு மாசத்துல எவ்வளவு பேர் என் மேல அன்பு வெச்சுருக்கீங்கனு தெரிஞ்சுது. இது போதும் எனக்கு” என்று பேசியிருக்கிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://cinema.vikatan.com/kollywood/vaiyapuri-reveals-why-he-joined-instagram-after-director-snub




