ஐதராபாத், ஜேசன் சஞ்சய் பார்ப்பதற்கு அவரது தந்தை விஜய் 1993, 1994, 1995 காலக்கட்டங்களில் எப்படி இருந்தாரோ அப்படியே இருக்கிறார் என 'சிக்மா' பட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிரஞ்சீவி கூறியுள்ளார். ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் 'சிக்மா' நடிகரும் தமிழக முதல் அமைச்சருமான விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் சிக்மா. சந்தீப் கிஷன் ஹீரோவாக நடித்திருக்கிறார். மேலும் இப்படத்தில் பரியா அப்துல்லா ராஜூ சுந்தரம், அன்புதாசன், யோக் ஜாபி, சம்பத் ராஜ், கிரண் கொண்டா, மகாலட்சுமி சுதர்சனன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார். கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவும் பிரவீன் கே.எல். படத்தொகுப்பும் செய்துள்ளனர். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய 5 மொழிகளில் வரும் அக்டோபர் 2 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. புரமோஷனில் ஜேசன் சஞ்சய் விஜய்யின் மகன் இயக்குநராக அறிமுகம் ஆகும் முதல் படம் என்பதால் இந்த படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. படத்திற்கான புரமோஷன் நிகழ்ச்சிகளிலும், தனியார் தொலைக்காட்சி பேட்டிகளிலும் பங்கேற்று வருகிறார். "அவரது தந்தை விஜயை போலவே." இந்த நிலையில், 'சிக்மா' படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நேற்று நடைபெற்றுள்ளது. அதில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிரஞ்சீவி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும் போது, "ஜேசன் சஞ்சய் பார்ப்பதற்கு அவரது தந்தை விஜய் 1993, 1994, 1995 காலக்கட்டங்களில் எப்படி இருந்தாரோ அப்படியே இருக்கின்றார். அவரது தாத்தா எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் பாட்டி சோபா ஆகியோரின் குணநலன்களும் கதை எழுதும் திறமையும் அவரது மரபணுவிலேயே (Genetics) வந்துள்ளதால் அவருக்கு இயக்குநராக ஆர்வம் ஏற்பட்டுள்ளது" "அவரது தாத்தாவும், தந்தையும் நடிகர்களாக சிறப்பான உயரத்தையும், உச்ச நிலையையும் அடைந்ததைப் போலவே, ஜேசன் சஞ்சயும் 'சிக்மா' படத்தின் மூலம் தான் விரும்பும் உயரத்தையும், திரையுலகில் உச்ச நிலையையும் நிச்சயம் அடைவார்." என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/cinema/cinemanews/just-like-his-father-vijay-chiranjeevi-speaks-about-jason-sanjay




