நாட்டில் பெரும்பாலான மாநிலங்களில் பில்லிசூனியத்திற்கு எதிராகச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அப்படி இருந்தும் எதாவது காரியம் நடக்க வேண்டும் என்றால் அல்லது தனக்கு வேண்டப்படாத நபருக்கு பில்லிசூனியம் வைக்கப்பது ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கிறது. சத்தீஷ்கர் மாநிலத்தில் உயர் நீதிமன்ற நீதிபதிக்கு பில்லி சூனியம் வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சத்தீஷ்கர் மாநிலம், பிலாஸ்பூர் மாவட்டத்தின் சிபாட் அருகில் உள்ள தியோரி கிராமத்தில், நான்கு நபர்கள் நள்ளிரவு அங்குள்ள சுடுகாட்டில் அமானுஷ்ய சடங்குகளைச் செய்ததாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். நீதிபதிக்கு பில்லிசூனியம் அவர்கள் சத்தீஸ்கர் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரமேஷ் சின்ஹாவின் புகைப்படத்தை வைத்து பில்லி சூனியம் செய்ய முயன்றனர். நள்ளிரவு நேரத்தில் சுடுகாட்டில் சந்தேகத்திற்கிடமான முறையில் சிலர் நடமாடுவதைப் பார்த்த கிராமவாசிகள், அந்த இடத்தைச் சுற்றி வளைத்து, அந்தக் கும்பலைக் கையும் களவுமாகப் பிடித்தனர். அங்கு இருந்தவர்களில் 3 பேர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். ஆனால் ஒருவர் மட்டும் பிடிபட்டார். அந்த நபரின் பெயர் ரிஷிகேஷ் குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அந்த நபரை பொதுமக்கள் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். சுடுகாட்டில் நள்ளிரவு பூஜை போலீஸார் சுடுகாட்டை ஆய்வு செய்தபோது, தலைமை நீதிபதி ரமேஷ் சின்ஹாவின் புகைப்படம் மற்றும் இரண்டு பேரின் புகைப்படங்களைச் சுற்றி பூஜைப் பொருட்கள் வைக்கப்பட்டு இருந்தன. மீன்கள், எலுமிச்சை, வெர்மிலியன், தேங்காய் மற்றும் தாந்த்ரீக சடங்குகளுடன் தொடர்புடைய பல்வேறு மர்ம பொருட்களும் இருந்தது. அவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். ஜாமீன் கிடைக்க பூஜை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் படத்திற்கு அருகில் பலியிடுவதற்கான பொருட்களும் இருந்தது. போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் சத்தீஸ்கர் உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு நிலுவையில் உள்ள ஒருவர் தனக்கு ஜாமீன் கிடைக்கவேண்டும் என்பதற்காக இந்தப் பில்லி சூனியத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட இளைஞனிடம் விசாரித்தபோது தனக்கு சமூக ஊடக தளங்கள் மூலம் சாமியார் ஒருவரின் அறிமுகம் கிடைத்தது என்று தெரிவித்தார். சிறையில் அடைக்கப்பட்டுள்ள உறவினருக்குச் சாதகமான ஜாமீன் உத்தரவைப் பெறுவதற்கு பூஜை செய்ய சாமியாரை அனுகியதாகவும் அவர் தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.vikatan.com/crime/black-magic-performed-against-high-court-judge-to-secure-bail-four-arrested




