துபாய், பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் புதிய உலக சாதனை படைத்தார். 55 ரன்களுக்கு சுருண்ட பாகிஸ்தான் பெண்கள் ஆசிய கோப்பை தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது. இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் அணி, 18.1 ஓவர்களில் 55 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. 8.4 ஓவர்களில் இலக்கை எட்டிய இந்தியா 56 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 8.4 ஓவர்களில் 57 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 150-வது ஆட்டம் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையில் இந்திய அணி பங்கேற்ற 150-வது சர்வதேச டி20 ஆட்டம் இதுவாகும். இதன் மூலம் சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டில் 150 ஆட்டங்களுக்கு கேப்டனாக செயல்பட்ட முதல் வீராங்கனை என்ற வரலாற்றுச் சாதனையை ஹர்மன்பிரீத் கவுர் படைத்தார். இந்த சாதனை வரிசையில் இலங்கை அணியின் கேப்டன் சமாரி அட்டப்பட்டு 121 ஆட்டங்களுடன் 2-வது இடத்தில் உள்ளார். ஆண்கள் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் கூட இதுவரை எந்த கேப்டனும் 150 ஆட்டங்களுக்கு அணியை வழிநடத்தியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/sports/cricket/indian-skipper-harmanpreet-becomes-first-cricketer-to-captain-in-150-t20is




