லக்னோ, யுபிடி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் புவனேஸ்வர் குமாரின் லக்னோ பால்கன்ஸ் அணி வீழ்த்தி ரிங்கு சிங்கின் மீரட் மேவரிக்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. அதிரடி தொடக்கம் ஏகானா மைதானத்தில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் லக்னோ பால்கன்ஸ் - மீரட் மேவரிக்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மீரட் மேவரிக்ஸ் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அந்த அணிக்கு ஸ்வஸ்திக் சிகாரா மற்றும் திவ்யான்ஷ் ஜோஷி சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். இந்த ஜோடி 4.3 ஓவர்களில் 53 ரன்கள் சேர்த்திருந்தபோது, விப்ராஜ் நிகாம் பந்துவீச்சில் ஸ்வஸ்திக் சிகாரா 18 ரன்களில் போல்டானார். திவ்யான்ஷ் ஜோஷி அபாரம்! சிகாரா ஆட்டமிழந்த பிறகு திவ்யான்ஷ் ஜோஷி அதிரடியாக விளையாடினார். லக்னோ அணியின் பந்துவீச்சாளர்களை நாலாபுறமும் சிதறடித்த அவர், 40 பந்துகளில் 12 பவுண்டரிகள், 7 சிக்சர்களுடன் 105 ரன்கள் குவித்தார். இதன் மூலம் யுபிடி20 லீக் வரலாற்றில் அதிவேக சதம் அடித்த வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார். 204 ரன்கள் இலக்கு திவ்யான்ஷ் ஜோஷியின் அதிரடி ஆட்டத்தின் உதவியுடன் மீரட் மேவரிக்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்கள் குவித்தது. லக்னோ பால்கன்ஸ் அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. 109 ரன்களில் சுருண்ட லக்னோ இதையடுத்து 204 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்திய லக்னோ பால்கன்ஸ் அணி, மீரட் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில் அந்த அணி, 16 ஓவர்களில் 109 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. லக்னோ அணியில் அதிகபட்சமாக அஜித் வர்மா மட்டும் அதிகபட்சமாக 24 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார். 2-வது முறையாக சாம்பியன் இதன் மூலம் மீரட் மேவரிக்ஸ் அணி 94 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று யுபிடி20 கோப்பையை கைப்பற்றியது. நான்கு முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள மீரட் மேவரிக்ஸ் அணிக்கு இது 2-வது சாம்பியன் பட்டமாகும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/sports/cricket/rinkus-meerut-mavericks-beat-bhuvneshwers-lucknow-falcons-to-lift-up-t20-trophy




