பெங்களூரு, கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் கொரட்டகெரே பகுதியைச் சேர்ந்த காவ்யா (25), பெங்களூரு புறநகர் நெலமங்களா அருகே சோண்டேகொப்பாவைச் சேர்ந்த நவீன் என்பவரை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு, கணவர் மற்றும் அவரது பெற்றோருடன் சோண்டேகொப்பாவில் வசித்து வந்தார். வரதட்சணை கொடுமை திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகியும் குழந்தை பிறக்காததால் காவ்யா மனவேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, கடந்த சில மாதங்களாக வரதட்சணை கேட்டு கணவர் நவீனும், அவரது குடும்பத்தினரும் காவ்யாவை கொடுமைப்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குழந்தை இல்லாதது தொடர்பாக தம்பதியருக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவிலும் குழந்தை தொடர்பாக கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த காவ்யா, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். தற்கொலை நேற்று காலை குடும்பத்தினர் எழுந்தபோது காவ்யா தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மாதநாயக்கனஹள்ளி போலீசார், உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில், காவ்யாவின் பெற்றோர் அளித்த புகாரில், வரதட்சணை கேட்டு நவீன் மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்ந்து கொடுமைப்படுத்தியதே இந்த துயர சம்பவத்திற்கு காரணம் என குற்றம்சாட்டியுள்ளனர். இதுகுறித்து மாதநாயக்கனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/india/karnataka-woman-commits-suicide-by-hanging-due-to-dowry-harassment




