சென்னை, சசிகுமார் நடிக்கும் ‘வதந்தி’ சீசன் 2 வெப் தொடரின் டிரெய்லர் வெளியானது. கடந்த 2022ம் ஆண்டில் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் அமேசான் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியான வெப் தொடர் ‘வதந்தி’. இதில் எஸ்.ஜே. சூர்யா, லைலா, சஞ்சனா, நாசர் ஆகியோர் இணைந்து நடித்திருந்தனர். இந்த வெப் தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. புஷ்கர் காயத்ரி தயாரித்த இந்த தொடருக்கு சைமன் இசையமைத்தார். முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து ‘வதந்தி’ தொடரின் 2ம் பாகம் ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆப் மணி’ என்ற பெயரில் உருவாகியுள்ளது. கிரைம் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள ‘வதந்தி 2’ தொடரை வால் வாட்சர் பிலிம்ஸ் சார்பில் எஸ் குஹபிரியா, எஸ் நந்தகுமார் மற்றும் கவுதம் செல்வராஜ் இணைந்து தயாரித்துள்ளனர். முதல் சீசனை இயக்கிய ஆன்ட்ரூ லூயிஸ் இந்த சீசனையும் இயக்கி உள்ளார். சமீபத்தில் ‘வதந்தி 2’ வெப் தொடரின் பர்ஸ்ட் லுக் வெளியானது. யஷ்வந்த், அனகா மருதோரா, அபர்ணா தாஸ், விவேக் பிரசன்னா, ரேவதி சர்மா மற்றும் அர்ஜுன் நந்தகுமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில், ‘வதந்தி 2’ வெப் தொடரின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இந்த தொடரில் சசிகுமார் முதல் முறையாக போலீசாக நடித்துள்ளார். இந்த ‘வதந்தி 2’ வெப் தொடரை, வால் வாட்சர் பிலிம்ஸ் சார்பில் இயக்குநர்கள் புஷ்கர் - காயத்ரி தயாரித்துள்ளனர். எட்டு எபிசோட்கள் கொண்ட ‘வதந்தி 2’ வெப் தொடர் ஆகஸ்ட் 7-ம் தேதி முதல் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/cinema/cinemanews/sasikumars-vadhandhi-2-web-series-trailer-out




