சென்னை, தாராபுரம், மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மதுராந்தகம் தொகுதியில் திமுக சட்டத்துறை இணை செயலாளராக உள்ள பரந்தாமன் மற்றும் தாராபுரம் தொகுதியில் வழக்கறிஞர் சுகன்யாவும் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மதுராந்தகம் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பரந்தாமன், கடந்த தேர்தலில் சென்னை எழும்பூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் ஆளும் தவெக இன்னும் வேட்பாளர் அறிவிக்கவில்லை. அதேபோல, அதிமுகவும் வேட்பாளர் அறிவிக்காத நிலையில், முதல் கட்சியாக திமுக வேட்பாளரை அறிவித்துள்ளது. இடைத்தேர்தலில் தமிழகத்தில் பிரதானமாக உள்ள மூன்று கட்சிகளும் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளதால், தேர்தல் களம் அனல் பறக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுராந்தகம் தொகுதி கடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் மதுராந்தகம் (தனி) தொகுதியில் தி.மு.க. சார்பில் அமுலு பொன்மலர் போட்டியிட்டார். அ.தி.மு.க. சார்பில் மரகதம் குமரவேல், த.வெ.க. சார்பில் எழில் கேத்தரின், நாம் தமிழர் கட்சி சார்பில் ஜானகிராமன் ஆகியோர் போட்டியிட்டனர். மொத்தம் பதிவான 1 லட்சத்து 96 ஆயிரத்து 268 வாக்குகளில், அ.தி.மு.க. வேட்பாளர் மரகதம் குமரவேல் 69,284 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்டவர்களில், த.வெ.க. வேட்பாளர் எழில் கேத்தரின் 62,090 வாக்குகள் பெற்று 2-வது இடம்பிடித்தார். இருவருக்குமான வித்தியாசம் 7,194 வாக்குகள் ஆகும். தி.மு.க. வேட்பாளர் அமுலு பொன்மலர் 59,838 வாக்குகள் பெற்று 3-வது இடம் பிடித்தார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜானகி ராமன் 4,950 வாக்குகள் பெற்றார். தாராபுரம் (தனி) தொகுதி தாராபுரம் (தனி) தொகுதியில் தி.மு.க. சார்பில் இந்திராணி, அ.தி.மு.க. சார்பில் சத்யபாமா, த.வெ.க. சார்பில் கவுரி சித்ரா, நாம் தமிழர் கட்சி சார்பில் திவ்யா ஆகியோர் போட்டியிட்டனர். மொத்தம் பதிவான 1 லட்சத்து 99 ஆயிரத்து 944 வாக்குகளில், அ.தி.மு.க. வேட்பாளர் சத்யபாமா 81,100 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்டவர்களில், தி.மு.க. வேட்பாளர் இந்திராணி 64,373 வாக்குகள் பெற்று 2-வது இடம்பிடித்தார். இருவருக்குமான வித்தியாசம் 16,727 வாக்குகள் ஆகும். த.வெ.க. வேட்பாளர் கவுரி சித்ரா 46,438 வாக்குகள் பெற்று 3-வது இடம் பிடித்தார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் திவ்யா 6,026 வாக்குகள் பெற்றிருந்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/dharapuram-and-maduranthakam-by-elections-dmk-candidates-announced




