காத்மாண்டு, கடந்த மூன்று நாட்களாக இடிபாடுகளுக்கு நடுவே மண்ணுக்குள் சிக்கியிருந்த 6 வயது சிறுமி பத்திரமாக உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். நேபாளத்தில் பனிப்பாறை சரிவால் ஏற்பட்ட பெருவெள்ளத்தின் போது மண் மற்றும் இடிபாடுகளுக்குள் நடுவே சிக்கி புதைந்திருந்த 6 வயது சிறுமி மூன்று நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திடீர் வெள்ளப்பெருக்கு நேபாளத்தின் ராசுவா மாவட்டத்தில் உள்ள திமுரே பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கடந்த புதன்கிழமை ஏற்பட்ட பனிப்பாறை சரிவைத் தொடர்ந்து அப்பகுதியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் பாறைகள், பனிக்கட்டிகள், சேறு கலந்த பெரு வெள்ளத்தின் வேகத்தில் வீடுகள், சாலைகள், பாலங்கள் உள்ளிட்டவை.அடித்துச் செல்லப்பட்டன. குழந்தையின் அழுகுரல் வெள்ளத்தில் சிக்கியவர்களைத் தேடும் பணியில் நேபாள ஆயுதப்படை போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். அப் போது, இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருந்த ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. உடனடியாக மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. இடிபாடுகளை ஒவ்வொன்றாக அகற்றி, சிறுமியை பத்திரமாக வெளியே கொண்டு வந்தனர். பின்னர்சிறுமியை திமுரேவில் உள்ள ஆயுதப்படை முகாமுக்கு அழைத்துச்சென்ற பின் தேவையான முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. கடந்த மூன்று நாட்களாக இடிபாடுகளுக்கு நடுவே மண்ணுக்குள் சிக்கியிருந்ததால் சிறுமியின் உடல் நிலை மோசமடைந்து வந்தது. இதையடுத்து அவரை உடனடியாக காத்மாண்டுவுக்கு அழைத்துச் சென்று மருத்துவ சிகிச்சை அளிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். முதலில் ஹெலிகாப்டர் மூலம் சிறுமியை காத்மாண்டுவுக்கு அழைத்துச் செல்ல முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இருள் சூழ்ந்ததுடன், மோசமான வானிலையும் நிலவியதால் அந்த முயற்சி கைவிடப்பட் டது. மருத்துவமனையில் சிகிச்சை இதையடுத்து நேற்று பிற்பகல் சிறுமி விமானம் மூலம் காத்மாண்டுவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்குள்ள மருத்துவமனையில் தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவ இடத்தில் மீட்புப் படையினர் சிறுமியை மீட்கும் காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளன. சேறும் சகதியும், உடைந்த கட்டடங்களின் பாகங்களும் நிறைந்த இடிபாடுகளுக்கு நடுவே மீட்புப் படையினர் போராடி, குழந்தையை உயிருடன் மீட்டெடுக்கும் காட்சிகள் காண்போரின் கண்களை குளமாக்கியது. 3 ஆயிரம் பேரை காணவில்லை நேபாளம் மற்றும் திபெத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் சிக்கி சுமார் 3,000 பேர் இன்னும் காணாமல் போயுள்ளனர். இவர்களில் நேபாளத்தில் 2,426பேரும், திபெத்தின் கியிரோங் மாவட்டத்தில் 554 பேரும் அடங்குவர். காணாமல் போனவர்களில் குறைந்தது 540 பேர் வெளிநாட்டினர். அவர்களில் கைலாஷ் மானசரோவர் யாத்திரை மேற்கொண்ட இந்தியர்களும் உள்ளனர். இதுவரை 700 க்கும் மேற்பட்டஉயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. முழுவீச்சில் மீட்பு பணி மழை, பனிமூட்டம் மற்றும் நேபாள திபெத் எல்லையில் உருவான தடுப்பு ஏரி உடையும் அபாயம் காரணமாகமீட்புப் பணிகள் தற்காலிகமாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில், வானிலை சீரானதைத் தொடர்ந்து நேற்று மீண்டும் முழுவீச்சில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. நேபாளத்தின் மீட்புப் பணிகளுக்கு இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்த சிறப்புக் குழுக்களும் உதவி வருகின்றன. வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களைச்சீரமைக்கவும், மீட்புப் பணிகளைத் தொடரவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப்பேரழிவால் ஏற்பட்டமறுகட்டமைப்புச் செலவு 4 முதல் 5பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.50 ஆயிரம் கோடி) வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/world/nepal-floods-girl-trapped-in-mud-for-3-days-rescued-safely




