பெர்லின், ஐரோப்பாவில் அமைந்துள்ள நாடு ஜெர்மனி. அந்நாட்டின் பவரியா மாகாணம் ரோசன்ஹிம் நகரில் ரெயில் நிலையம் உள்ளது. இந்த ரெயில் நிலையத்தில் இன்று அதிகாலை கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது. கத்திக்குத்து - இளம்பெண் பலி பவரியா மாகாணம் பர்ஸ்டன்பெல்ட்ப்ரூக் மாவட்டத்தை சேர்ந்த 27 வயது இளைஞர் நடத்திய இந்த கத்திக்குத்து தாக்குதலில் இங்கிலாந்தை சேர்ந்த 31 வயதான இளம்பெண் படுகாயமடைந்தார். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், இளம்பெண்ணை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு இளம்பெண்ணை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறித்தனர். இளைஞர் கைது இதையடுத்து, கத்திக்குத்து தாக்குதலை நடத்தி இளம்பெண்ணை கொன்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். மேலும், கத்திக்குத்து தாக்குதலுக்கான காரணம் குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/world/germany-railway-station-stabbing-attack-young-woman-killed




