மைதீன் இயக்கத்தில் துஷி, ஜனனி குணசீலன், ஜெயபிரகாஷ், செந்திகுமாரி, சுப்ரமணிய சிவா உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘ஆல் பாஸ்’. இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மன்சூர் அலிகான் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், "நான் சமீபத்தில் ஒரு படத்தில் பாதிக்கப்பட்டேன். எனக்கு வேதனையாக இருக்கிறது. சூர்யாவின் ‘கருப்பு’ படத்தில் நடித்தேன். கருப்பு- ஆர்.ஜே பாலாஜி ‘நாங்க நாலு பேரு எங்களுக்குப் பயம் கிடையாது’ பாடலுக்கு நானும் வில்லன்களும் சேர்ந்து நடனம் ஆடுவோம். ஆர்.ஜே.பாலாஜி சொல்லித்தான் ஆடினோம். பிரசாத் லேப்பில் பயங்கரமாக நடனம் ஆடினோம். நான் என் மகன்களை படம் பார்க்க அழைத்துச் சென்றேன். படத்தில் அந்தக் காட்சி இடம்பெறவில்லை. "'உன் வேலையை நேசி, கற்றுக்கொண்டே இரு' என்று ரஜினி சார் சொன்னார்" - ஸ்ரேயா சரண் ஷேரிங் என் மகன்கள் என்னிடம் கேட்டார்கள். அதற்கு ‘நாம் என்னப்பா பண்ண முடியும்’ என அவர்களிடம் சொன்னேன். எனக்கு நீங்கள் எந்தக் கதாபாத்திரத்தையும் கொடுக்க வேண்டாம். ஆனால், அதை ஏன் இருட்டடிப்பு செய்கிறீர்கள்? மன்சூர் அலிகான் நான்தான் உண்மையான கருப்பு. நான் கஷ்டப்பட்டு ஆடினேன். அது படத்தில் இல்லை. யூடியூப்பில் வரும் என்றார்கள். ஆனால் வரவில்லை. என் மகன்கள் என்னை கேட்கிறார்கள்? நான் அவர்களிடம் என்ன பதில் சொல்வது?” எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://cinema.vikatan.com/kollywood/actor-mansoor-alikhan-about-karuppu-movie




