கிரண் அப்பாவரம், ஸ்ரீ கவுரி பிரியா நடித்த ‘சென்னை லவ் ஸ்டோரி’ படம் வரும் ஆகஸ்ட் 21 ஆம் தேதி சோனிலிவ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. தமிழில் ‘மாடர்ன் லவ் ஸ்டோரி’ இணையத் தொடரில் அறிமுகமான நடிகை கவுரி பிரியா, ‘லவ்வர்’ திரைப்படத்தின் மூலம் மிகவும் புகழ்பெற்றார். தற்போது, தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். ‘பேபி’ படத்தின் வெற்றிக்கு பிறகு, எழுத்தாளரும் இயக்குனருமான சாய் ராஜேஷ் மற்றும் தயாரிப்பாளர் எஸ்கேஎன் ஆகியோர் மீண்டும் காதல் திரைப்படமான ‘சென்னை லவ் ஸ்டோரி’ படத்தில் மீண்டும் இணைந்தனர். சாய் ராஜேஷ் இப்படத்தின் கதையை எழுதியுள்ளதுடன் தயாரிப்பாளர்களில் ஒருவராகவும் உள்ளார். ரவி நம்பூரி இயக்கியுள்ள இந்த படம் கடந்த ஜூலை 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. மாஸ் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ரவி வர்மா நம்பூரி இயக்கத்தில் ‘சென்னை லவ் ஸ்டோரி’ படத்தில் ஸ்ரீ கவுரி பிரியா நாயகியாக நடித்துள்ளார். இந்தப் படத்தில் நாயகனாக கிரண் அப்பாவரம் நடித்துள்ளார். ‘சென்னை லவ் ஸ்டோரி’ படம் ரூ.60 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது. இந்நிலையில், ‘சென்னை லவ் ஸ்டோரி’ படம் வரும் ஆகஸ்ட் 21 ஆம் தேதி சோனிலிவ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. View this post on Instagram முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/cinema/ott/sri-gauri-priyas-chennai-love-story-coming-to-ott-release-date-announced




