சென்னை, வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு பணிகளை மேற்கொள்ள வசதியாக சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களிலும் கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழக அரசு வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னையின் 15 மண்டலங்களிலும் முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்புப் பணிகளைத் தீவிரப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஒவ்வொரு மண்டலத்திற்கும் தலா 1 ஐ.ஏ.எஸ். அதிகாரி கண்காணிப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மண்டலம் வாரியாக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள்:- மண்டலம் 1. திருவொற்றியூர் - கே. பாலசுப்ரமணியம், IAS மண்டலம் 2. மணலி - பி. குமரவேல் பாண்டியன், IAS மண்டலம் 3. மாதவரம் - எஸ். அருண்ராஜ், IAS மண்டலம் 4. தண்டையார்பேட்டை - ஆர். கண்ணன், IAS மண்டலம் 5. ராயபுரம் - ஆஷா அஜித், IAS மண்டலம் 6. திரு.வி.க. நகர் - பி. கணேசன், IAS மண்டலம் 7. அம்பத்தூர் - கே. விவேகானந்தன், IAS மண்டலம் 8. அண்ணாநகர் - பி. காயத்ரி கிருஷ்ணன், IAS மண்டலம் 9. தேனாம்பேட்டை - டி. கிறிஸ்துராஜ், IAS மண்டலம் 10. கோடம்பாக்கம் - எஸ். கோபால சுந்தர ராஜ், IAS மண்டலம் 11. வளசரவாக்கம் - டாக்டர் ஜெ. விஜயா ராணி, IAS மண்டலம் 12. ஆலந்தூர் - வாகே சங்கெத் பால்வந்த், IAS மண்டலம் 13. அடையாறு - டாக்டர் கே. செந்தில் ராஜ், IAS மண்டலம் 14. பெருங்குடி - மகேஸ்வரி ரவிக்குமார், IAS மண்டலம் 15. சோழிங்கநல்லூர் -டி. பாஸ்கர பாண்டியன், IAS முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/monsoon-precaution-monitoring-officers-appointed-for-all-15-zones-of-the-chennai-corporation




