லண்டன், இங்கிலாந்து, பாகிஸ்தான் இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 103 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியிலும் இங்கிலாந்து 194 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றியுள்ளது. கடைசி டெஸ்ட் இங்கிலாந்து, பாகிஸ்தான் இடையேயான கடைசி டெஸ்ட் நாளை தொடங்குகிறது. எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இந்திய நேரப்படி நாளை மாலை 3.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இப்போட்டியில் வெற்றிபெற்று தொடரை முழுமையாக கைப்பற்ற இங்கிலாந்தும், ஆறுதல் வெற்றிபெற பாகிஸ்தானும் போராடும் என்பதால் நாளைய ஆட்டத்தில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/sports/cricket/final-test-england-vs-pakistan-tomorrow




