லாகூர், இங்கிலாந்துக்கு சென்றுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரு டெஸ்டுகளிலும் பாகிஸ்தான் அணி படுதோல்வி அடைந்து தொடரை இழந்து விட்டது. இவ்விரு டெஸ்டுகளில் சொதப்பிய முகமது ரிஸ்வான். சல்மான் அலி ஆஹா, இமாம் உல்-ஹக் உள்பட 7 வீரர்களை தடாலடியாக நீக்கிய பாகிஸ் தான் கிரிக்கெட் வாரியம் உடனடியாக தாயகம் திரும்பவும் உத்தரவிட்டது. 'பாகிஸ்தான் அணி வீரர்களின் ஓய்வறையில் நிச்சயம் ஏதோ பிரச்சினை உள்ளது. அதனால் தான் இவர்கள் மீது கிரிக்கெட் வாரியம் இத்தகைய துணிச்சலான நடவடிக்கையை எடுத்துள்ளது' என நிகழ்ச்சி ஒன் றில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது யூசுப் கூறியிருந்தார். இந்த நிலையில் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது பாகிஸ்தான் வீரர்கள் ஒழுங்கீனம் மற்றும் நடத்தை விதிமீறலில் ஈடுபட்டதாக ஊடகங்களின் வாயிலாக பல்வேறு செய்தி வெளியாகி உள்ளதால், அது குறித்து உள்விசாரணையை தொடங்கி இருப்பதாகவும், கிரிக்கெட் வாரியத் தின் நெறிமுறைகளுக்குட்பட்டு இந்த நடைமுறை கையாளப்படுவதாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. விசாரணை முடிவில் ஒழுங்கீன மீறல் கண்டறியப்பட்டால் சம் பந்தப்பட்ட வீரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/sports/cricket/did-they-engage-in-acts-of-indiscipline-during-the-test-series-investigation-into-pakistan-players




