சிவகங்கை, சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் யூனியன் கீழடியில் அகழாய்வு நடை பெற்ற இடத்தில் அமைக்கப்பட்டு உள்ள திறந்தவெளி அருங்காட்சிய கத்தை அமைச்சர் ராஜ்மோகன் பார்வையிட்டு நேற்று ஆய்வு செய்தார். தற்போது நடந்து வரும் 11-ம் கட்ட அகழாய்வு தளத்தையும் பார்வை யிட்டு பணிகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் அமைச்சர் ராஜ்மோகன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- இதற்கு முந்தைய அரசுகள் செய்த நல்ல திட்டங்களை எந்த துறையாக இருந்தாலும் ஒருபோதும் நிறுத்தப்படாது. மாணவர் சேர்க்கை கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் மற்றும் அறிவியல் சான்றுகளை முறையாக தொகுத்து, மத்திய தொல்லியல் துறையுடன் இணைந்து உலக அளவில் கீழடியின் பெருமையை பறைசாற்ற அரசு தொடர்ந்து பாடுபடும். மாணவர் சேர்க்கை குறைவாக இருந்தாலும் எந்த ஒரு அரசு பள்ளியையும் மூடும் எண்ணம் அரசுக்கு கிடையாது. 10 மாணவர்கள் இருந்தாலும் வீடுவீடாக சென்றாவது மாணவர்களை சேர்த்து பள்ளிகள் தொடர்ந்து நடத்தப்படும். முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் எம்.பி. த.வெ.க. அரசின் லஞ்ச ஊழலற்ற நிர்வாகத்தை பாராட்டியது மகிழ்ச்சி அளிக்கிறது. அரசு பள்ளி களில் காலை உணவுத்திட்டம் விரிவுபடுத்தப்படும். அ.தி.மு.க. உள்பட பல்வேறு கட்சியினர் த.வெ.க.வை நோக்கி வருகின்றனர். கட்சியில் இணையும் அனைவரையும் அரவணைத்து செல்வோம். இவ்வாறு அவர் கூறினார். மலை குகைகளில் ஆய்வு இதேபோல் மதுரை மாவட்டம் மாங்குளம் மீனாட்சிபுரம் கிராமத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க இருவகை மலைக்குகைகள் மற்றும் தமிழ் பிராமி கல்வெட்டுகளை அமைச்சர் ராஜ்மோகன் நேரில் பார்வை யிட்டு விரிவான ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், அந்த படுகைகளில் படுத்தும், அமர்ந்தும் ஆய்வு செய்தார். தொடர்ந்து அமைச்சர் ராஜ்மோகன் நிருபர்களிடம் கூறுகையில், "கீழடி அகழாய்வு என்பது தமிழர்களுக்கு மட்டுமல்லாமல், உலக நாகரிகத்திற்கே மிகப்பெரிய தாய்மடி போன்றதாகும். எனவே, அறிவியல் பூர்வமாக, இன்னும் கூடுதல் ஆதாரங்களுடன் முறையான வழிகளில் மத்திய அரசுடன் கலந்து ஆலோசித்து அது நிரூபிக்கப்பட உள்ளது. சரியான தருணத்தில், நாம் எல்லோரும் பெருமைப்படத்தக்க வகையில் இன்னும் ஒரு மாபெரும் விஷயம் துல்லியமான ஆதாரங்களோடு முறைப்படி விரைவில் அறிவிக்கப்படும்" என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/let-us-proclaim-the-glory-of-keeladi-to-the-world-minister-rajmohan




